செனாப் பாலத்தில் வந்தே பாரத் ரயில் சேவை?
ஸ்ரீநகர்-''உலகின் மிக உயரமான செனாப் ரயில்வே பாலத்தில், வந்தே பாரத் ரயில் மற்றும் வந்தே மெட்ரோ ரயில் இயக்கப்படும்,'' என, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்து உள்ளார்.
ஜம்மு - காஷ்மீரின், ரியாசி மாவட்டத்தில் ஓடும் செனாப் ஆற்றின் குறுக்கே, 1,178 அடி உயரத்தில் ரயில்வே பாலம் கட்டப்பட்டு உள்ளது.
உலகின் மிக உயரமான இந்த ரயில்வே பாலம், சலால் அணையின் அருகே இரு மலை முகடுகளுக்கு இடையே பிரமாண்டமான கட்டமைப்புடன் கட்டப்பட்டு உள்ளது.
காற்றின் வேகம், நில அதிர்வுகளை தாங்கும் வகையில் இந்த பாலம் உறுதியாக கட்டப்பட்டு உள்ளது.
ஐரோப்பிய நாடான பிரான்சில் உள்ள ஈபிள் டவரை விட, செனாப் ரயில்வே பாலத்தின் உயரம் அதிகம்.
இந்நிலையில் நேற்று, செனாப் ரயில்வே பாலத்தின் கட்டுமானப் பணிகளை, பா.ஜ.,வைச் சேர்ந்தவரும், ரயில்வே அமைச்சருமான அஸ்வினி வைஷ்ணவ் நேரில் ஆய்வு செய்தார்.
இதன் பின் செய்தியாளர்களிடம்அவர் கூறியதாவது:
உதம்பூர்- - ஸ்ரீநகர் - -பாரமுல்லா ரயில் இணைப்பு திட்டம் முழுமை பெற்ற பின், ஜம்மு மற்றும் ஸ்ரீநகரை இணைக்கும் வகையில் வந்தே மெட்ரோ ரயில் இயக்கப்படும். இந்தத் திட்டப் பணிகள், வரும் டிசம்பர் அல்லது 2024 ஜனவரிக்குள் முடிந்து விடும்.
இது பயன்பாட்டுக்கு வந்த உடன், வந்தே பாரத் ரயில் இயக்கப்படும்.
வந்தே பாரத் ரயில் சுமுகமாக இயங்குவதற்காக, ஜம்மு - காஷ்மீரில் உள்ள பட்காமில் பராமரிப்பு வசதிகள் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தற்போது, உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் சீனாவின் குய்சோ மாகாணத்தில் பெபன்ஜியாங் ஆற்றின் மீது, ௯௦௨ அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வாசகர் கருத்து (3)
IT IS REALLY GREAT AND WONDERFUL NEWS. IF CONGRESS OR OTHER SELFISH ANTI NATIONALS ALLIANCE PARTY WAS IN POWER THEN EVEN AFTER 100 OR 1000 YEARS ALSO THESE KIND OF PROJECTS WOULD NEVER GET COMPLETED.
விரைவில் அந்த பக்க காஷ்மீரையும் இணைக்க இம்ரான் பாடு படுவார் ..ஜம்முவிலிருந்து 25 கிலோ மீட்டர் அந்த பக்கம் ..பாரமுல்லா விலிருந்தும் அந்த பக்கம் நீட்டிக்கலாம்
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
STRUCTURALMARVEL