Load Image
Advertisement

வேகமெடுக்கும் கொரோனா: 5 மாதத்தில் இல்லாத பாதிப்பு

புதுடில்லி-கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவிற்கு, நம் நாட்டில் கொரோனா தொற்றால் நேற்று ஒரே நாளில் 1,890 பேர் பாதிக்கபட்டுள்ளனர்.
Latest Tamil News

நாடு முழுதும் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கடந்த 149 நாட்களில் இல்லாத அளவிற்கு, தினசரி கொரோனா பாதிப்பு 1,890 ஆக உயர்ந்துள்ளது.

இதன் வாயிலாக கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 9,433 ஆக அதிகரித்துள்ளது.
Latest Tamil News
கொரோனா பாதிப்பால் நேற்று ஏழு பேர் உயிரிழந்தனர். இதனால் கொரோனா தொற்றால் பலியானோர் எண்ணிக்கை, 5.30 லட்சம் ஆக உயர்ந்துள்ளது.

நம் நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 1.56 சதவீதம் ஆகவும், தொற்றிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை 98.79 சதவீதமாக உள்ளது.

அதேபோல், 1.19 சதவீதம் பேர், இந்நோய் தொற்றால் இறந்துள்ளனர். நாடு முழுதும் இதுவரை 220.65 கோடி 'டோஸ்' கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து (3)

  • அபுசாமி -

    கொரோனாவை 2021 லேயே ஒழிச்சு கட்டிட்டோம். அப்புறம் இப்போ நேருதான் கொண்டு வந்து உட்டுட்டார். அவரு இல்லேன்னா அந்நிய சக்திகள்தான் காரணம்.

  • Mani . V - Singapore,சிங்கப்பூர்

    தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் எந்த பிரச்சினையும் இருக்காது. திமுக வினர் அதிலும் குறிப்பாக சின்னவர், இளையவர், இளவரசர் லட்சக்கணக்கில் கூட்டத்தை கூட்டி மாநாடு நடத்தினால், அதில் கொரோனா கூட்ட நெரிசலில் மூச்சு திணறி, நசுங்கி, காலில் மிதிபட்டு மரணமடைந்து விடும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்