சமீபத்தில், என்.எல்.சி., நிலம் கையகப்படுத்துவதற்கு எதிரான கருத்தரங்கம், நெய்வேலியில்
நடந்தது. அதில் பங்கேற்ற பா.ம.க., தலைவர் அன்புமணி பேசுகையில், என்.எல்.சி., விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் தி.மு.க., அரசை கடுமையாக எதிர்த்தார்.
'விவசாயத்துறை அமைச் சர், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் வைத்து பேச வேண்டும்' என, அன்புமணி எச்சரித்தார்.
இந்தப் பேச்சு, ஆளும்கட்சியினரிடம் அதிருப்தியை உருவாக்கி உள்ளது.கடந்த சட்டசபை
தேர்தலில், அ.தி.மு.க., வுடன் கூட்டணி அமைத்து பா.ம.க., 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அன்புமணிக்கு ராஜ்யசபாஎம்.பி., பதவியும்அ.தி.மு.க., கொடுத்தது. வன்னியர் சமூகத்திற்கு,
அ.தி.மு.க., ஆட்சியில் உள்ஒதுக்கீடு வழங்கியது.
எனினும், தி.மு.க., வுடன் திடீரென உறவை ஏற்படுத்திக் கொண்ட ராமதாஸ், லோக்சபா
தேர்தலுக்கு தி.மு.க.,வுடன் கூட்டணி வைப்பார்என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தினார்.இந்
நிலையில், என்.எல்.சி., நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில், ஆளுங்கட்சியை கடுமையாக பா.ம.க., விமர்சித்து உள்ளது. எனவே, அ.தி.மு.க.,வுடன் மீண்டும் கூட்டணியை புதுப்பிக்க,
அக்கட்சி அச்சாரம் போடுகிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அன்புமணிக்கு பா.ஜ., 'குட்டு'
பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியதாவது:'ராகுலுக்கு வழங்கியிருப்பது பெரிய தண்டனை; நீதிமன்றமும் இன்னொரு வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும். அவசரப்பட்டு, அவரது எம்.பி., பதவியை பறித்திருப்பதை பா.ஜ., தவிர்த்திருக்கலாம்' என, பா.ம.க., தலைவர்
அன்புமணி கூறியுள்ளார்.
ராகுலின் பதவியை பறித்தது அரசியலமைப்பு சட்டம் தானேயன்றி, பா.ஜ., அல்ல என்பது
ஒரு எம்.பி.,க்கு தெரியாதது வியப்பளிக்கிறது. அவசரப்பட்டு இதுபோன்ற அறிக்கைகள் கொடுப்பதை தவிர்த்திருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- நமது நிருபர் -
வாசகர் கருத்து (3)
கண்டிப்பாக பாமாகவை எந்த கூட்டணியிலும் சேர்க்க கூடாது‼️ அம்போ விட்டால் தான், இனிமேல் மத்த கட்சியை மிரட்டி அதிக சீட் வாங்கி, தேர்தலில் ஜெயித்து வந்த பின், அவர்களின் காலை வாறுவதும் அத்துடன் எந்த கட்சி ஆட்சிக்கு வருகிறதோ அந்த கட்சியிடன் சாய்வது கூட்டணி தர்மத்தை மீறுவது பாமாக வின் அன்றாட செயல் 👆🏿 அதிமுக, திமுக மற்றும் பிஜேபி மூவரும் இந்த கட்சியை எந்த காலத்திலும் சேர்க்கமல், தனியா தன்னதனியா விடுவிடவேண்டும் ‼️‼️ பாமக ஒரு ஜாதி குடும்ப கட்சி, 😂 ஜனநாயக கட்சி இல்லை 👆🏿🙏🏽 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
திரும்பி இந்த பக்கம் வந்தால் காலில் இருப்பதை கழட்டி அடியுங்கள்
திமுக இவர்களுக்கு வரும் லோக் சபா தேர்தலில் இரண்டு சீட் கொடுத்தாலே ஆச்சர்யம்தான். அதிமுக பக்கம் வந்தால் ஒரு நாலு இல்லை ஐந்து வரை கிடைக்கலாம்.