Load Image
Advertisement

ரயில் மறியல் வழக்கிலிருந்து மத்திய அமைச்சர் விடுதலை

முசாபர்பூர்-பீஹாரில், ரயிலை மறித்து போராட்டம் நடத்திய வழக்கில், மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் உட்பட, ௨௩ பேரை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
Latest Tamil News

கடந்த, 2014ல், மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, பீஹாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மறுத்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அம்மாநிலம் முழுதும் ரயில் மறியல் போராட்டம் நடந்தது.

இது தொடர்பாக, தற்போதைய மத்திய கிராமப்புற வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் கிரிராஜ் சிங், லோக் ஜனசக்தி எம்.பி., வீனா தேவி, பா.ஜ., தலைவர்கள் ராம் சூரத் ராய், சுரேஷ் சர்மா உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
Latest Tamil News
இந்த வழக்கு விசாரணை, சோனேபூரில் உள்ள ரயில்வே நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

பின், முசாபர்பூரில் உள்ள எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான குற்றங்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் சமீபத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

'குற்றம் சாட்டப்பட்ட 27 பேரில், 23 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுஉள்ளது. இதில் கிரிராஜ் சிங் உட்பட, 23 பேர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை.

'எனவே அவர்கள் அனைவரும் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்படுகின்றனர்' என, தீர்ப்பு அளிக்கப்பட்டது.


வாசகர் கருத்து (5)

 • venugopal s -

  காங்கிரஸ் ஆட்சியின் போது பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து கோரி போராட்டம் செய்த பாஜக அமைச்சர் இப்போது அதே சிறப்பு அந்தஸ்தை பீகாருக்கு கொடுக்காத மத்திய பாஜக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவாரா?

 • அப்புசாமி -

  ஆளுங்கட்சி ஆளுங்களுக்கு எதிர் ஆதாரம் கிடைச்சதா சரித்திரம் உண்டா கோவாலு? ஆரியன் கானை யே அபாவின்னு விடுதலை செஞ்ச நாடு நம்ம நாடு.

 • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

  எங்க ஊர்ல அமைச்சரான ஓரிரு மாதங்களுக்குள் பழைய வழக்குகளை விடியல் அரசு முடித்து வைத்துவிடும்.. பிஜேபி இந்த விஷயத்தில் ரொம்பவே லேட் ...

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  ஆஹா.. இனிமே எல்லாம் இப்படித்தான். சும்மா, அனாவஸ்யமாக குற்றம் சுமத்தி, வழக்கு போட்டு, எங்கள் மாதிரித்தான் நீங்களும் என்று இறுமாப்புடன் இருக்கும் வீணாப்போன எதிர்க்கட்சிகளுக்கு ஒரு பெரிய குட்டு.

 • V.Saminathan - ,

  ஆக ராகுல்காந்தியின் எதிர்க்கட்சிகளை குறிவைத்து நசுக்கும் செயலில் காங். ஏற்கனவே ஈடுபட்டுள்ளது-ஆனால் அத்வானி உள்பட பல பா ஜ க தலைவரழகள் மட்டுமே உண்மையான நிரபராதிகளாக கோர்ட்டால் அடையாளம் கண்டு விடுவிக்கப் படுகின்றனர்-மற்ற அடைத்துக் கட்சியினருமே உள்ளே போகும் தகுதியையே வளர்த்துக் கொண்டுள்ளனர்-இந்த வள்ளலில் சிறந்த ஜனநாயகத்.தேர்தல் முறையென நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோமோ? ஒரே வழி அடுத்தபத்மு வருடங்களுக்கு தேர்தலே இல்லாத வண்ணம் வரும் 2024 தேர்தலில் வெற்றி பெறுவோரே ஆட்சியை நீட்டிக்கும் இடைச் செருகலை அரசியலமைப்பில் ஏற்படுத்தினால் என்ன தவறு-முஷாரப்-வூய்.நொய் பிங்-மகாதிர் முகமது கிம்உன் டங் போன்ற நாடுகளின் அதிபரகள் அதைத்தானே செய்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்