Load Image
Advertisement

கவுடா கட்சிக்கு ராவ் ஆதரவு

பெங்களூரு:கர்நாடகா சட்டசபை தேர்தலில், முன்னாள் பிரதமர் தேவ கவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு ஆதரவு அளிக்க, தெலுங்கானாவில் ஆளும் பாரத் ராஷ்ட்ர சமிதி முடிவு செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
Latest Tamil News

கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மாநில சட்டசபைக்கு, வரும் மே மாதத்தில் தேர்தல் நடக்க உள்ளது. இந்தத் தேர்தலில் பா.ஜ., - காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை தனித்து போட்டியிட உள்ளன.

இந்நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு இந்தத் தேர்தலில் ஆதரவு அளிக்க, தெலுங்கானா முதல்வரும், பாரத் ராஷ்ட்ர சமிதி தலைவருமான சந்திரசேகர ராவ் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெலுங்கானா எல்லையை ஒட்டியுள்ள, தெலுங்கு மொழி பேசுவோர் அதிகம் உள்ள கர்நாடகா பகுதிகளில் தனித்து போட்டியிட பாரத் ராஷ்ட்ர சமிதி திட்டமிட்டிருந்தது.

இந்நிலையில், தேவ கவுடா கட்சிக்கு, சந்திரசேகர ராவ் ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் பிரசாரம் செய்யவும் அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் குமாரசாமி, சமீபத்தில் மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினார்.
Latest Tamil News
அப்போது, மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய மம்தா பானர்ஜி உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.


வாசகர் கருத்து (4)

  • Fastrack - Redmond,இந்தியா

    கர்நாடகாவிலும் சட்டிஸ்கரிலும் கான்கிரஸ் வெல்லும் என்று கணிப்பு ...

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    அப்புடியே அமெரிக்காவிலும் ட்ரம்ப் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துவிடுங்கள் அண்ணா.

  • V.Saminathan - ,

    அந்த கௌடா ஒரு வெட்டு பிரதமர்-இவரது மற்றும் மன்மொகன் சிங்கின் ஆட்சியே திறமையற்ற பிரதமர்கள் லிஸ்டில் சேர்ந்தது -சந்திர சேகர ராவும்

  • R Kay - Chennai,இந்தியா

    அப்போ கவுடா நிச்சயம் வெற்றிதான். தனித்து ஆட்சி அமைத்து விடுவார். குடமிளகாய் மூக்கர் ஆதரவென்றால், சும்மாவா? அப்படியே வாரிசுகளை அனுப்பி கொள்ளையில் பங்கையும் கேளுங்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்