Load Image
Advertisement

அ.தி.மு.க.,வில் உள்ள களை எடுக்கப்பட்டு விட்டது: இ.பி.எஸ்.,

தஞ்சாவூர்,: நெற்பயிர் சிறப்பாக வளர வேண்டும் என்றால், நடவு பணிகள் முடிந்த சில குறிப்பிட்ட காலங்களில், பயிர்களில் உள்ள களைகள் எடுக்கப்படும். அப்படியாக, அ.தி.மு.க.,வில் உள்ள களை எடுக்கப்பட்டு விட்டது. இனி அ.தி.மு.க., என்னும் பயிர் நன்றாக வளர்ந்து நல்ல விளைச்சலை கொடுக்கும் என முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.
Latest Tamil News

தஞ்சாவூரில், முன்னாள் அமைச்சர் காமராஜ் இல்ல விழா நடந்தது. இதில், தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழ்மாநில கட்சி தலைவர் வாசன், முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்., பங்கேற்றனர்.

விழாவில், இ.பி.எஸ்., பேசியதாவது; நான் முதல்வராக இருந்த போது 24 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கினேன். ஆனால், இன்றைக்கு உள்ள அரசு அதற்கு நேர கட்டுபாடுக்கொண்டு வந்துள்ளது. மின் தட்டுப்பாடு இல்லை என சொல்லும் அரசு, எதற்காக நேர கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும். தி.மு.க., அரசு வந்தால், மின் தடை வந்து விடும்.

விவசாயிகளுக்கும்,விவசாய தொழிலாளர்களுக்கும் என்று பாடுபடும் கட்சி அ.தி.மு.க., தான். நெற்பயிர் சிறப்பாக வளர வேண்டும் என்றால், நடவு பணிகள் முடிந்த சில குறிப்பிட்ட காலங்களில் பயிர்களில் உள்ள களைகள் எடுக்கப்படும். அப்படியாக அ.தி.மு.க.,வில் உள்ள களை எடுக்கப்பட்டு விட்டது. இனி அ.தி.மு.க., என்னும் பயிர் நன்றாக வளர்ந்து நல்ல விளைச்சலை கொடுக்கும்.

இன்றைக்கு சில பேர் தனது சொந்த நலனுக்காக அரசியல் இருந்து வருகின்றனர். ஆனால், பலர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா விட்டு சென்ற கட்சி தொடர வேண்டும் என்ற சேவை மனபான்மையுடன் அ.தி.மு.க.,வில் உள்ளனர்.

அ.தி.மு.க.,வில் தனி மனித ஆதிக்கம் கிடையாது. நான் இதுவரை தலைவர் என்ற வார்த்தையை கூறியது கிடையாது. எப்போதும் தொண்டன் தான். தொண்டனோடு தொண்டனாக இருந்து தான் இன்றைக்கு இந்த நிலைக்கு நான் வந்துள்ளேன். அ.தி.மு.க.,வில் என்னை போல ஒரு லட்சம் பழனிசாமி இருந்துக்கொண்டு இருக்கிறார்கள்.
Latest Tamil News
எனவே, அ.தி.மு.க,வை யாராலும் அளிக்க முடியாது. பழனிசாமி இல்லாவிட்டால், யாராவது ஒருவர் அ.தி.மு.க.,வை ஆள்வார்கள். தொண்டர்கள் இருக்கும் வரை இந்த கட்சியை யாரும் ஒன்றும் செய்ய முடியாது. ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கும் வரை இந்த கட்சிக்கு யாராலும் உரிமை கொண்டாட முடியாது தொட்டுப் பார்க்க முடியாது இந்த தொண்டர்கள் ஆசிர்வாதத்தோடு நாம் மீண்டும் ஆட்சி அமைப்போம் இவ்வாறு அவர் பேசினார்.


வாசகர் கருத்து (11)

  • மோகனசுந்தரம் -

    நீயே ஒரு களை தான். உன்னை தான் முதலில் களை எடுக்க வேண்டும்.

  • அப்புசாமி -

    இப்போ கட்சியில் களைகள் மட்டும்தான் இருக்கு.

  • ராஜா -

    களை எடுகின்றேன் என்று நிலத்தில் பெரிய பள்ளங்கள் தோண்டப்பட்டு இருக்கிறது. மூடுவது மிகுந்த சிரமம்.

  • Mani . V - Singapore,சிங்கப்பூர்

    கௌரவ டாக்டர் பழனிசாமி அடிப்படையில் ஒரு விவசாயி என்பதால் அவரிடம் தெளிவு படுத்திக்கொள்ள இந்த கேள்வி. களைக்கொல்லி உபயோகப்படுத்தியா?

  • Fastrack - Redmond,இந்தியா

    அ.தி.மு.க,வை யாராலும் அளிக்க முடியாது...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்