Load Image
Advertisement

சாவர்க்கரை அவமதிப்பதை பொறுத்துக்கொள்ள மாட்டோம்:ராகுலுக்கு உத்தவ் கண்டனம்

மும்பை: இந்தியாவின் ஜனநாயாகத்தை காப்பாற்ற நாங்கள் ஒன்று பட்டுள்ளோம். அதே நேரத்தில் சாவர்க்கரை அவமதிப்பதை பொறுத்துக்கொள்ள மாட்டோம் என மகா., முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே கூறினார்.
Latest Tamil News

மகாராஷ்டிரா மாநிலம் மாலேகானில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: என்னிடமிருந்து அதிகாரம் பறிக்கப்படுவதைப் பற்றி நான் கவலைப்படவில்லை, ஆனால் இப்போது ஆட்சியில் இருக்கும் திறமையற்ற அரசாங்கங்களைப் பற்றி நான் கவலைப்படுகிறேன்.

இந்தியாவின் ஜனநாயகத்தை காப்பாற்ற நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம் என்பதை ராகுல் காந்தியிடம் கூற விரும்புகிறேன்.இது ஜனநாயகத்தின் போராட்டம், நாங்கள் உங்களுடன் நிற்போம். ஆனால், சாவர்க்கரை அவமதிப்பதை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். '2024ல் நீங்கள் மீண்டும் பாஜகவைத் தேர்ந்தெடுத்தால், அதற்குப் பிறகு எந்தத் தேர்தலும் வராது', என கூறினார்.
Latest Tamil News
முன்னதாக ராகுல் மன்னிப்பு குறித்து அளித்த பேட்டி ஒன்றில் மன்னிப்பு கடிதம் எழுதி தருவதற்கு நான் ஒன்றும் சாவர்க்கர் இல்லை என குறிப்பிட்டு இருந்தார்.


வாசகர் கருத்து (16)

  • ஆரூர் ரங் -

    கருணை மனுவுக்கும் மன்னிப்புக் கடிதத்துக்குமுள்ள வேறுபாடு தெரியாமல் ராகுல் உளறுகிறார்..😝 சிறையில் அநியாயமாக அடைக்கப்பட்டிருந்த அனைத்து கைதிகளும் கருணை அடிப்படையில் விடுதலைக்கு விண்ணப்பிக்க காந்தி ஆலோசனை கூறினார். மன்னிப்பு எனும் வார்த்தையே அக்கடிதத்தில் இல்லை. எங்கோ இருந்த சிறையில் வாடி இறப்பதால் சுதந்திரம் கிடைத்திருக்காது ..வெளியே வந்து மக்களைத் திரட்டி போராடி இருந்தால் மட்டுமே பலன் இருந்திருக்கும்.

  • Dharmavaan - Chennai,இந்தியா

    எலி தவளை நட்பு போல் சேனா காங்கிரஸ் கூட்டு.. பதவிக்காக அப்பன் கொள்கைக்கு துரோகம் செய்த உத்தவ்

  • rama adhavan - chennai,இந்தியா

    அதுதான் அவமதிப்பு ஏற்பட்டு விட்டதே? கவரிமானாக இருந்தால் கூட்டணியை முறிக்க வேண்டியது தானே? எல்லாம் வெளி வேஷம்? ஏன் ஏக்னாத் ஷிண்டே கூட வாயே திறக்கவில்லை?

  • Rpalnivelu - Bangalorw,இந்தியா

    வரும் நாட்களில் ஒரிஜினல் காந்தியையே இந்த டூப்ளிகேட் காந்தி ஏடாகூடமாக பேசுவான் அப்போதும் முட்டு குடுக்க ஆட்கள் இருப்பாங்க

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    இருதலைக்கொள்ளி எரும்புக்கு எடுத்துக்காட்டு இவர்தான்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்