Load Image
Advertisement

ராகுலை தொடர்ந்து சஞ்சய் ராவத்தும் தகுதிநீக்கம்?

புதுடில்லி: எம்.எல்.ஏ.,க்களை சோர் மண்டல் என்று கூறியதால் சிவசேனா கட்சியின் ராஜ்யசபா எம்.பி சஞ்சய் ராவத்தும் தகுதிநீக்கம் செய்யப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Latest Tamil News

மோடி என்ற சமுதாயத்தைஅவமதிப்பு செய்ததாக காங்., எம்.பி., ராகுலுக்கு சூரத் கோர்ட் 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. இதன் அடிப்படையில் அவர் எம்.பி.,பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவேசேனா கட்சியை சேர்ந்த சஞ்சய் ராவத் ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்து வருகிறார். இவர் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களை திருட்டு கும்பல்கள் என குறிப்பிடும் வகையில் சோர் மண்டல் என்ற வார்த்தைய பிரயோகித்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து மகாராஷ்டிரா சட்டசபை சபாநாயகர் ராகுல் நர்வேகர் கூறியிருப்பதாவது:மாநில சட்டமன்றத்தில் தேர்நதெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.,க்களை சோர்மண்டல் என்று கூறி இருப்பதை கண்டித்து சஞ்சய் ராவத் மீது சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அவருக்கு போதிய அவகாசம் தந்த பின்னர் அவர் அளித்த விளக்கம் போதுமானதாக இல்லை. மேலும் அவர் ராஜ்யசபா உறுப்பினராக இருப்பதால் அவர் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராஜ்யசபா துணை தலைவருக்கு சிறப்பு தீர்மானத்தை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது என கூறினார்.

சஞ்சய் ராவத் இது குறித்து கூறுகையில் ராகுலைப்போல் என்னையும் தகுதி நீக்கம் செய்யும் நடவடிக்கையானது எனக்கு எதிராக செய்யப்படும் சதியாகும். இதற்காக நான் பயப்பட போவதில்லை.நான் கூறியது அனைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களை கூற வில்லை. பால்தாக்கரே உருவாக்கிய சிவசேனாவை உடைத்து சின்னத்தையும் பறித்த ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான 40 எம்.எல்.ஏ.,க்களை மட்டுமே சோர் கும்பல் (திருடும் கும்பல்) என கூறினேன் .நான்சொல்லாத கருத்துக்கு மன்னிப்புகேட்க மாட்டேன். ஆளும் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் மிரட்டல்களுக்கு அடிபணியமாட்டேன் இவ்வாறு சஞ்சய் ராவத் கூறி உள்ளார்.
Latest Tamil News
சஞ்சய் ராவத், ராஜ்யசபாவின் சிவசேனா கட்சி தலைவர் பதவியில் இருந்து ஏக்நாத் ஷிண்டேவால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


வாசகர் கருத்து (7)

  • Naga Subramanian - Kolkatta,இந்தியா

    தமிழகத்திலுள்ள சில காட்சிகள், மைனாரிட்டி சமூகத்தின் ஓட்டுகளை பெற்றிட, இந்துக்களை அதிலும், பிராமணர்களை இழிவு படுத்துவதையே தொழிலாக கொண்டுள்ளது. இவை அனைத்திற்கும், இனிமேல் பயம் வரும். இப்படி ஒரு விதிமுறை இருந்தும், இப்பொழுதுதான் முதன்முறையாக சரியாக கையாள பட்டுள்ளது. பூணலை அறுப்பதும், கடவுள் இராமரை இழிப்பதும், விநாயகர் சிலையை உடைப்பதும், கந்தசஷ்டி கவசத்தை பழிப்பதும், இந்து பெண்மணிகளை வேசிகள் என்று பொதுவெளியில் எந்தவித அச்சமுமின்றி உரைப்பதும், போன்ற எத்தனை விதமான கேவலங்கள்? இனிமேலாவது இவர்கள் அடங்க வேண்டும். நடக்குமா?

  • ramani - dharmaapuri,இந்தியா

    தமிழகத்திலும் தகுதி நீக்கம் வந்தால் நன்றாக இருக்கும். மோடிஜியை ரொம்ப கேவலமாக விமர்சிக்கிறார்கள்.

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    சஞ்சய் ராவத் கூறுவது எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதுதான்.

  • V.Saminathan - ,

    அய்யோ அந்த அழகிய காட்சியான தமிழக அரசியல் திருடர்களின் பதவி பறிபோன முகத்தைக் காண மனம் குமுறுகிறது-சீக்கிரம் செய்ங்கடா அப்பா.

  • R Kay - Chennai,இந்தியா

    கேட்டால், கருத்து சுதந்திரம் என்று கூறுவான் இந்த உளறுவாயன். ஒரு அரைகுறை எதை வேண்டுமானாலும் கூறலாம் என்று நினைத்து உளறிவிட்டு, இன்று தியாகம் செய்த குடும்பம் என்று அணத்திக்கொண்டிருக்கிறது. இந்த குடும்பம் மேலும் எந்த தியாகங்களும் செய்ய வேண்டாம். அரசியலை விட்டு ஒதுங்கினாலே போதும். நாடு உருப்படும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்