ADVERTISEMENT
இந்திய நிறுவனங்களில் 5 சதவீதம் மட்டும், ஊழியர்களுக்கு விரிவான ஒருங்கிணைந்த காப்பீடு வசதியை அளிப்பது, ஆய்வில் தெரிய வந்துள்ளது.
'ஆன்லைன்' காப்பீடு சேவை நிறுவனம் 'பிளம்' இந்திய அளவில் நடத்திய ஆய்வில், மருத்துவ காப்பீடு, 'டெர்ம்' காப்பீடு, விபத்து காப்பீடு உள்ளிட்ட அம்சங்கள் கொண்ட ஒருங்கிணைந்த காப்பீடு வசதியை, 5 சதவீத நிறுவனங்கள் மட்டுமே அளிப்பதாக தெரிவிக்கிறது.
'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் இந்த ஆய்வுக்காக பரிசீலிக்கப்பட்டன. மொத்தம், 2,500க்கும் அதிகமான காப்பீடு திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டன.
ஊழியர்கள் குடும்பத்தினருக்கான காப்பீடு வசதியை, 69 சதவீத நிறுவனங்கள் வழங்குவதாகவும் தெரிய வந்துள்ளது. 30 சதவீத நிறுவனங்கள் ஊழியர்களுக்கு மட்டும் காப்பீடு வசதி அளிக்கின்றன.
பல நிறுவனங்கள் தொலை மருத்துவ வசதி உள்ளிட்ட கூடுதல் காப்பீடு பாதுகாப்பை அளித்தாலும், டெர்ம் காப்பீடு வசதியை பல நிறுவனங்கள் முதன்மையாக கருதுவதில்லை என்றும் தெரிய வந்துள்ளது.
பெண் ஊழியர்களை பொருத்தவரை போதுமான பேறுகால பலன்களை பெறுவதில்லை என்றும் ஆய்வு தெரிவிக்கிறது. நிறுவனங்கள், ஊழியர்கள் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என கருதப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!