Load Image
Advertisement

கிரெடிட் கார்டு புள்ளிகள் மூலம் அதிக பலன் பெறும் வழிகள்

Ways to get the most out of Credit Card points    கிரெடிட் கார்டு புள்ளிகள் மூலம்  அதிக பலன் பெறும் வழிகள்
ADVERTISEMENT
'கிரெடிட் கார்டு' வசதியை சரியாக பயன்படுத்த அறிந்திருப்பதோடு, அவை அளிக்கும் பரிசு புள்ளிகளையும் சரியாக பயன்படுத்த வேண்டும். பெரும்பாலான கிரெடிட் கார்டுகள் பலவிதமான பரிசு மற்றும் சலுகை புள்ளிகளை அளிக்கின்றன.


இந்த புள்ளிகளை பலவிதமாக பயன்படுத்திக் கொள்ளலாம். இவற்றை முறையாக பயன்படுத்திக் கொள்வதன் மூலம் அதிக பலன்களையும் பெறலாம். கார்டு பயன்படும் விதத்திற்கு ஏற்ப இது அமையும். கிரெடிட் கார்டு புள்ளிகளை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்வதற்கான வழிகளை பார்க்கலாம்.

அறிக்கை பலன்:



ஒரு சில கிரெடிட் கார்டுகள், பரிசு புள்ளிகளின் மதிப்பை கார்டு அறிக்கையில் பெற வழி செய்கிறது. இதன்படி, பரிசு புள்ளிகளுக்கு நிகரான தொகை கார்டு கணக்கில் வரவு வைக்கப்படும். எனினும், இது சிறந்த வழி அல்ல. இதை விட, ஆன்லைனில் பொருட்களை வாங்கும் போது, புள்ளிகள் மூலம் பணம் செலுத்தும் வாய்ப்பை நாடலாம்.

வங்கி சலுகை:



இதே போல வங்கி இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள பொருட்களை வாங்கவும் பரிசு புள்ளிகளை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், பொருட்களின் அடக்க விலைக்கே வாங்க வேண்டும். தள்ளுபடி சலுகை கிடைக்க வாய்ப்பில்லை. சில நேரங்களில் வங்கிகள் குறுகிய கால சலுகைகளை அளிக்கலாம்.

பயண டிக்கெட்:



ஒரு சில வங்கிகள் கிரெடிட் கார்டு பரிசு புள்ளிகள் கொண்டு பயண டிக்கெட் போன்றவற்றை பதிவு செய்து கொள்ள வழி செய்கின்றன. விமான டிக்கெட் மற்றும் ேஹாட்டல் முன்பதிவு செய்து கொள்ளலாம். பிரிமியம் கார்டுகள் எனில், புள்ளிகள் அளிக்கும் பலன் கூடுதலாக இருக்கலாம்.

விமான சலுகை:





ஒரு சில கார்டுகள், பரிசு புள்ளிகளை விமான பயணங்களுக்கான புள்ளிகளாக மாற்றிக்கொள்ள வழி செய்கின்றன. அடிக்கடி விமான பயணங்கள் மேற்கொள்பவர்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். இதே போலவே, சில கார்டுகளில் ேஹாட்டல்களுக்கான விசுவாச புள்ளிகளாகவும் மாற்றிக் கொள்ளலாம்.

நன்கொடை:



கிரெடிட் கார்டு பரிசு புள்ளிகளை, நுகர்வோர் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்றில்லை. கார்டு உறுப்பினர் விரும்பினால், இந்த புள்ளிகளை நன்கொடையாக அளிக்கலாம். பரிசு புள்ளிகளுக்கு ஏற்ற தொகை, தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட சில வங்கிகள் வழி செய்கின்றன.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement