Load Image
Advertisement

”ஏப்ரலில் ரெபோ விகிதம் 0.25 % உயர வாய்ப்பு”

"Repo rate may be hiked by 0.25 percent"   ”ஏப்ரலில் ரெபோ விகிதம் 0.25 % உயர வாய்ப்பு”
ADVERTISEMENT
சில்லறை பணவீக்கம் தொடர்ந்து நிர்ணயித்த வரம்பை விட அதிகமாக இருப்பதால், ஏப்ரலில் ரிசர்வ் வங்கி, ரெபோ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை குழு கூட்டம் வரும் ஏப்.,3,5 மற்றும் 6ம் தேதிகளில் நடைபெற உள்ளது. பணக்கொள்கை குறித்த கூட்டத்தில், முக்கியமாக உயர்ந்து வரும் சில்லறை பணவீக்கம், வளர்ந்த நாடுகளின் மத்திய வங்கி நடவடிக்கை ஆகிய 2 முக்கிய விஷயங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.


ரிசர்வ் வங்கி, மே, 2022 முதல் ரஷ்ய - உக்ரைன் போர், சர்வதேச அளவில் வினியோகம் தடைப்பட்டது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ரெபோ வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. 2023-24ம் நிதியாண்டில் ரிசர்வ் வங்கி, 6 முறை பணக்கொள்கை குழு கூட்டத்தை கூட்டவுள்ளது.

Latest Tamil News
இம்மாத துவக்கத்தில், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் , 'கோவிட், உக்ரைன் போர் உள்ளிட்ட காரணங்களால், உலகம் முழுவதும் பணக்கொள்கை இறுக்கப்பட்டது. இருந்த போதும் இந்திய பொருளாதாரம், நிதித்துறை நிலையானதாக உள்ளது. மோசமான பணவீக்கத்தை நாம் கடந்து விட்டோம்' என கூறியிருந்தார்.

பிப்ரவரியில் நடந்த பணக்கொள்கை குழு கூட்டத்தில் ரிசர்வ் வங்கி, 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியது. இதனால் ரெபோ விகிதம் 6.50 சதவீதமாக அதிகரித்துள்ளது. நுகர்வோர் விலை குறியீட்டின் அடிப்படையில் (அதாவது சில்லறை பணவீக்கம்) ஜனவரியில் 6.52 சதவீதமாகவும், பிப்ரவரியில் 6.44 சதவீதமாகவும் உள்ளது.
Latest Tamil News
பாங்க் ஆஃப் பரோடாவின் தலைமைப் பொருளாதார நிபுணர் மதன் சப்னாவிஸ்,"கடந்த 2 மாதங்களில் சில்லறை பணவீக்கம் 6.5 சதவீதம் மற்றும் 6.4 சதவீதமாக உள்ளது. பணப்புழக்கம் இப்போது இடைப்பட்ட நிலையில் இருப்பதால், ரிசர்வ் வங்கி மீண்டும் விகிதங்களை 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்துமென நாங்கள் எதிர்பார்க்கலாம் " என்று கூறியுள்ளார்.


இந்திய மதிப்பீடுகள் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைமைப் பொருளாதார நிபுணர் டி.கே. பண்ட் கூறுகையில்,

'ரிசர்வ் வங்கி ரெபோ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தும் என்று எதிர்பார்க்கிறோம். தற்போதைய சுழற்சியில் இதுவே கடைசி விகித உயர்வாக இருக்கும். பிரிட்டன், அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை தொடர்ந்து உயர்த்தி வருவதால், ரிசர்வ் வங்கியும் ரெபோ விகிதத்தை உயர்த்த வாய்ப்புள்ளது.'

இவ்வாறு அவர் கூறினார்.

ரெபோ விகித உயர்வால், வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் மேலும் உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.


வாசகர் கருத்து (1)

  • அப்புசாமி -

    ஒன்றிய அரசுக்கும், ஊழியர்களுக்கும் கவலை இல்லை. நம்ம கிட்டே வரி வசூலிச்சு தங்களுக்கு அகவிலைப்படி கொடுத்துப்பாங்க. மத்தவங்க நலனைப்.பத்தி கவலை இல்லை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement