Load Image
Advertisement

கடந்த ஒரு வாரத்தில் ரூ.86,400 கோடியை இழந்த இந்தியாவின் டாப் நிறுவனங்கள்!

Indias top companies that lost Rs.86,400 crore in the last one week!   கடந்த ஒரு வாரத்தில் ரூ.86,400 கோடியை இழந்த இந்தியாவின் டாப் நிறுவனங்கள்!
ADVERTISEMENT
சந்தை மதிப்பின் அடிப்படையில் இந்தியாவின் டாப் 10 நிறுவனங்களில் இன்போசிஸ், டி.சி.எஸ்., எஸ்.பி.ஐ., உள்ளிட்ட 5 நிறுவனங்கள் கடந்த வாரம் சந்தை மதிப்பீட்டில் ரூ.86,447.12 கோடியை இழந்துள்ளன.

இந்தியாவின் டாப் 10 நிறுவனங்களில் ரிலையன்ஸ் தொடர்ந்து முதலிடத்தை ஆட்சி செய்து வருகிறது. அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களில் டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், இன்ஃபோசிஸ், ஐடிசி, ஹெச்டிஎஃப்சி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் பார்தி ஏர்டெல் ஆகியவை உள்ளன.

கடந்த வாரத்தில் அமெரிக்க வங்கித் துறையில் நிலவும் நெருக்கடி, பணவீக்க தடுப்பு நடவடிக்கைகள், சர்வதேச பொருளாதார மந்தநிலை ஆகியவைக் காரணமாக பங்குச்சந்தைகள் வீழ்ச்சி கண்டன. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சுமார் 0.8% வீழ்ந்தன.
Latest Tamil News ரிலையன்ஸ், டிசிஎஸ், எச்டிஎப்சி., வங்கி, இன்போசிஸ் மற்றும் எஸ்.பி.ஐ., ஆகியவற்றின் பங்கு விலைகள் வீழ்ச்சி கண்டதால், சந்தை மதிப்பில் சரிவைக் கண்டன. ஐசிஐசிஐ வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஐடிசி, எச்டிஎப்சி வீட்டுக் கடன் நிறுவனம் மற்றும் பார்தி ஏர்டெல் ஆகியவற்றின் பங்குகள் சற்றே உயர்ந்ததால் சந்தை மதிப்பில் ஏற்றம் கண்டன.

இன்ஃபோசிஸின் சந்தை மதிப்பானது ரூ.25,217.2 கோடி சரிந்து ரூ.5.7 லட்சம் கோடியாக உள்ளது. எஸ்.பி.ஐ.,யின் மதிப்பு ரூ.21,062.08 கோடி குறைந்து ரூ.4.5 லட்சம் கோடியானது. டிசிஎஸ் மதிப்பு ரூ.21,039.55 கோடி குறைந்து ரூ.11.4 லட்சம் கோடியாக குறைந்தது. ரிலையன்ஸ் மதிப்பு ரூ.13,226.53 கோடி குறைந்து ரூ.14.9 லட்சம் கோடியாக உள்ளது. எச்டிஎஃப்சி வங்கி சந்தை மதிப்பில் ரூ.5,901.76 கோடி இழந்தது. இதில் அதிக சரிவை ஐடி நிறுவனங்களான இன்போசிஸ், டிசிஎஸ் கண்டது. அதைத் தொடர்ந்து எஸ்.பி.ஐ., சரிந்தது.

மற்றொரு புறம் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் பங்குகள் விலை உயர்ந்ததால் அதன் சந்தை மதிப்பு ரூ.10,905 கோடி கூடியது. தற்போது அவ்வங்கியின் மதிப்பு ரூ.5.94 லட்சம் கோடி. ஹிந்துஸ்தான் யூனிலீவரின் மதிப்பு ரூ.7,542 கோடி அதிகரித்து ரூ.5.8 லட்சம் கோடியாகவும், ஐடிசி சந்தை மதிப்பு ரூ.3,664 கோடி உயர்ந்து ரூ.4.7 லட்சம் கோடியாகவும், பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.2,787 கோடி உயர்ந்து ரூ.4.24 லட்சம் கோடியாகவும், எச்டிஎப்சியின் மதிப்பு ரூ.384 கோடி அதிகரித்து ரூ.4.6 லட்சம் கோடியாகவும் இருக்கிறது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement