பிதார்: நிஜாம் ஆட்சியில் ஹைதராபாத் விடுதலைக்காக போராடியவர்களையும், உயிர்தியாகம் செய்தவர்களை, ஓட்டு வங்கி அரசியலுக்காக காங்கிரஸ் மறந்துவிட்டது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டி உள்ளார்.
கர்நாடக மாநிலம் பிதார் என்ற இடத்தில், ஹைதராபாத் விடுதலைக்காக உயிர் தியாகம் செய்தவர்களின் நினைவிடம் மற்றும் சர்தார் வல்லபாய் படேல் நினைவிடத்தை திறந்து வைத்த பிறகு அவர் பேசியதாவது: நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 1948ம் ஆண்டு நிஜாமால் கோரடா என்ற இடத்தில், 200 பேர் படுகொலை செய்யப்பட்டனர். ஆனால், திருப்தி படுத்தும் கொள்கையை காரணமாக வைத்தும், ஓட்டு வங்கி அரசியலுக்காகவும் ஹைதராபாத் விடுதலைக்காக போராடியவர்களையும், உயிர் தியாகம் செய்தவர்களையும் காங்கிரஸ் நினைத்து பார்க்கவில்லை. படேல் மட்டும் இருந்திருக்காவிட்டால், ஹைதராபாத் சுதந்திரம் அடைந்திருக்காது.

ஹைதராபாத் விடுதலை நாளை கொண்டாட, அந்த மாநிலத்தை ஆளும் சந்திரசேகர ராவ் அரசு கட்சி தயக்கம் காட்டியது. ஆனால், பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ., அரசு அந்த நாளை வெகு சிறப்பாக கொண்டாடியது. கடந்த ஆண்டும் கொண்டாடியது. இந்த ஆண்டும் கொண்டாடப்பட்டது.
கர்நாடகாவில் மீண்டும் பா.ஜ., ஆட்சியை கொண்டு வர வேண்டும். அப்போதுதான், ஹைதராபாத் விடுதலைக்காக உயிர்தியாகம் செய்தவர்கள் நினைவாக ரூ.50 கோடியில் பிரம்மாண்ட நினைவிடம் அமைக்கப்படும். இது நாடு முழுவதும் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதுடன், அவர்களின் வரலாற்றை அவர்களுக்கு எடுத்துக்கூறும்.

கர்நாடகாவை ஆட்சி செய்த காங்கிரஸ், சிறுபான்மையினருக்கு வழங்கிய இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கு விரோதமானது. மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க அரசியல்சாசனத்தில் எந்த பிரிவும் இல்லை. ஆனால், பிரித்தாளும் எண்ணம் கொண்ட காங்கிரஸ் வழங்கிய இட ஒதுக்கீட்டை பா.ஜ., அரசு ரத்து செய்தது. வொக்காலிக்கா மற்றும் லிங்காயத் சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது.
முன்னதாக அங்கு 102 அடி உயர கம்பத்தில் தேசியக்கொடியை ஏற்றி அமித்ஷா மரியாதை செலுத்தினார்.
வாசகர் கருத்து (10)
படேல் அவசரமாக கி ஹைதெராபாத் ஐ பிடிக்க காரணம் நிஜாம் தன வசமுள்ள தங்கத்தை விற்று பாகிஸ்தானுக்கு ஆயுதம் வாங்க உதவப்போகிறார் என்று தெரிந்ததனால் தான் நேரு லண்டன் சென்றது அப்போது வரவிருந்த ஓரிரு முட்டுக்கட்டையும் அகற்றிவிட்டது . அதற்கு படேல் கொடுத்த விலை, அவர் இறந்த பொது, யாரும் அவர் உடலுக்கு மரியாதை செலுத்தவோ , சென்று பார்க்கவோ, அவர் மகளுக்கு ஆறுதல் சொல்லவோ உதவவோ கூடாதென்று கட்டளை இடப்பட்டதாம்
இரண்டு பாக்கிஸ்தானையும் இணைக்கவும் கூட இடம் கொடுக்க வேண்டும் என்பதுதான் நேரு காந்தியின் திட்டமே - அதாவது பல மாநிலங்களை தியாகம் செய்ய வேண்டும் என்றிருந்தார்கள். நல்ல வேளையாக நேருவின் மகளால் அப்படி ஒரு பிரச்சினை வராமல் தடுக்கப்பட்டு கிழக்குப்பாக்கிஸ்தான் பங்களாதேசாக உருவாகியது.
அறுபது வருடங்களாக தொடர்ந்து ஆதரவு அளித்த மக்களுக்கே அல்வா கொடுத்தது இந்த காங்கிரஸ் கட்சி.
விடுதலையில் முக்கிய பங்கு வகித் தவர்களையே இப்பிடி தூற்றுகின்றனர். ஏன்னா அவிங்களெல்லாம் காங்கிரஸ் காரங்க.
மக்களை திசை திருப்பும் முயற்சி பலிக்காது