Load Image
Advertisement

இந்திய வம்சாவளி சிறுமி மரணம்: அமெரிக்கருக்கு 100 ஆண்டு சிறை

US Man Jailed For 100 Years Over Indian-Origin Girl's Death: Report இந்திய வம்சாவளி சிறுமி மரணம்: அமெரிக்கருக்கு 100 ஆண்டு சிறை
ADVERTISEMENT
வாஷிங்டன்: துப்பாக்கிச்சூட்டில், இந்திய வம்சாவளியை சேர்ந்த 5 வயது சிறுமி இறந்த வழக்கில் அமெரிக்காவை சேர்ந்தவருக்கு 100 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் லூசியானாவில் உள்ள ஓட்டல் அறையில் மையா படேல் (5) என்ற சிறுமி விளையாடி கொண்டிருந்தார். கதவு அப்போது குண்டு பாய்ந்ததில் சிறுமி படுகாயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்த போதும், மையா படேல் உயிரிழந்தார்.

Latest Tamil News
இது தொடர்பாக ஜோசப் லீ ஸ்மித் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். வண்டி நிறுத்துமிடத்தில் மற்றொரு நபருடன் ஏற்பட்டதகராறில் ஸ்மித் துப்பாக்கியால் சுட்டதும், ஆனால், அருகில் இருந்த அறையில் விளையாடி கொண்டிருந்த சிறுமி பாய்ந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இது தொடர்பான வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. விசாரித்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜான் டி மோஸ்லே, பரோல் மற்றும் தண்டனை குறைப்பு என எந்த சலுகையும் இல்லாத 60 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை வழங்கினார். மேலும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு 40 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.


வாசகர் கருத்து (6)

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    இதுபோன்ற சட்டம், தண்டனை நம் நாட்டில் முழுமையாக, நேர்மையாக நிறைவேற்றப்பட்டால், பல ஆயிரம் பேர் சிறையில் இருப்பார்கள். நம் நாட்டு சிறை பத்தாமல், வெளிநாடுகளில் உள்ள சிறைகளையும் வாடகைக்கு எடுக்கவேண்டி இருக்கும் - அப்படி ஒரு முறை இருந்தால்

  • Vena Suna - Coimbatore,இந்தியா

    இங்க தப்பு பண்ற ஆளுங்களுக்கு 1000 ஆண்டு தண்டனை கொடுப்பாங்க போல.

  • Fastrack - Redmond,இந்தியா

    எல்லாமே குடியேறி வந்தவர்கள் ..சிகப்பு இந்தியர்கள் யாரும் கண்ணில் தென்படுவதில்லை ..

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    ராம ராஜ்ஜியத்தில் சிறுமியை பலாத்காரம் செய்து எரித்து கொன்றால் கூட குற்றவாளிக்கு ஆதரவாக போராட்டம் செய்வார்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்