Load Image
Advertisement

க்ராம்ப்டன் மற்றும் பட்டர்பிளை நிறுவனங்கள் ஒன்றாக இணைகின்றன

Crompton and Butterfly announce merger  க்ராம்ப்டன் மற்றும் பட்டர்பிளை நிறுவனங்கள் ஒன்றாக இணைகின்றன
ADVERTISEMENT
வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கும் பட்டர்பிளை நிறுவனமும், மின்சாதனப் பொருட்கள் தயாரிப்பாளரான க்ராம்ப்டன் நிறுவனமும் வரும் நிதியாண்டின் இறுதியில் ஒரே நிறுவனமாக உள்ளன. இணைப்புக்கு பின்னர் க்ராம்ப்டனில் பட்டர்பிளைக்கு 3% பங்குகள் மட்டும் இருக்கும்.

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட பிரபல வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் பட்டர்பிளை. இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு தற்போது சுமார் ரூ.2,200 கோடி. கோவை தொழில் பெல்ட்டில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் பிறந்த முருகேச செட்டியார் தான் பட்டர்ஃபிளை காந்திமதி அப்ளையன்சஸ் நிறுவனத்தை ஆரம்பித்தவர். அவரது குடும்பத்தினர் பித்தளை பாத்திர தொழிலில் இருந்த போது, வித்தியாசமாக யோசித்து ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டம்ப்ளரை கொண்டு வந்தார். அது சந்தையில் தனித்து தெரிந்தது. அதுவே பட்டர்பிளை பிராண்ட் உருவாக காரணமானது.
Latest Tamil News 1986 - 89 காலக்கட்டத்தில் பட்டர்பிளை ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பிரஷர் குக்கர், பிளாஸ்க், எல்.பி.ஜி., அடுப்பு, மிக்சி, க்ரைண்டர்களை வரிசையாக களமிறக்கியது. 1994ல் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலானது. டிசம்பர் 2022 நிலவரப்படி பட்டர்பிளை நிறுவனத்தின் 83% பங்குகளை க்ராம்ப்டன் கையகப்படுத்தியிருந்தது. 17.22% பொதுப்பங்குகளாக உள்ளன. இந்நிலையில் இரு நிறுவனங்களின் இணைப்புக் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த இணைப்பிற்கு தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம், செபி, நிறுவனங்களுக்கு கடன் வழங்கியவர்கள், பங்குதாரர்கள் என பல்வேறு அமைப்புகளின் ஒப்புதல்கள் தேவை. அந்த நடைமுறைகள் அடுத்த ஓராண்டில் நடக்கும்.

அதன் பின்னர் பட்டர்பிளையின் பொதுப் பங்குதாரர்கள், தங்களின் 5 பங்குகளுக்கு இணையாக, க்ராம்ப்டனின் 22 பங்குகளை பெறுவர். அதன் பின்னர் ஒருங்கிணைந்த நிறுவனத்தில் பட்டர்பிளை பொதுப் பங்குகளின் எண்ணிக்கை 3% ஆகும். மார்ச் 24 நிலவரப்படி, பட்டர்பிளையின் பங்கு ஒன்றின் விலை ரூ.1266.25. க்ராம்ப்டனின் பங்கு ஒன்றின் விலை ரூ.292.45. இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.18,500 கோடி ஆகும்.

இணைப்பு குறித்து க்ராம்ப்டனின் எம்.டி., கூறியதாவது: இந்த இணைப்பு நிறுவனப் பயணத்தில் ஒரு முக்கியமான படி. ஒருங்கிணைந்த தொழிலில் முழு திறனையும் அடைய இவ்விணைப்பு உதவும். புதிய தயாரிப்புகளை கொண்டு வருவது மற்றும் கோ டூ மார்க்கெட் உத்தியை வேகமாக செயல்படுத்த முடியும். இந்த இணைப்பு பங்குதாரர்கள் அனைவருக்கும் குறிப்பிடத்தக்க மதிப்பை உருவாக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இவ்வாறு கூறினார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement