கொச்சி அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்து; ஒருவர் காயம்
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் கொச்சி அருகே இந்திய கடற்படைக்கு சொந்தமான துருவ் ஹெலிகாப்டர், தொழில் நுட்ப காரணத்தால் அவசர தரையிறக்கம் போது, விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

இந்திய கடற்படை அதிகாரி கூறுகையில், 25 அடி உயரத்தில் இருந்த போது ஹெலிகாப்டரில் கோளாறு ஏற்பட்டதால் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டது. அப்போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்து ஏற்பட்ட காரணம் குறித்து, ஆய்வு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

கேரளா மாநிலம் கொச்சி அருகே இந்திய கடற்படைக்கு சொந்தமான துருவ் ஹெலிகாப்டரில் எதிர்பாராதவிதமாக தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்ட போது, ஓடுதளத்துக்கு வெளியே நொறுங்கி விபத்துக்குள்ளானது. முதற்கட்ட தகவலின் படி, விமானி ஒருவர் காயமடைந்துள்ளார். சம்பவம் நடந்த இடத்தில், மீட்பு படையினர் மீட்பு பணி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்திய கடற்படை அதிகாரி கூறுகையில், 25 அடி உயரத்தில் இருந்த போது ஹெலிகாப்டரில் கோளாறு ஏற்பட்டதால் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டது. அப்போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்து ஏற்பட்ட காரணம் குறித்து, ஆய்வு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (4)
புதுசு புதுசா வாங்குன அப்பாச்சி குப்பாச்சி ஹெலிகாப்டர்கள் என்ப ஆச்சு? நம்ம தயாரிப்பு 25 அடிக்கே தாங்க மாட்டேங்குதே.
பல லட்சம் கோடி ராணுவ பட்ஜெட். ஆனாலும் வாரம் ஒரு விபத்து, பலி. ஸ்பேர் பார்ட்ஸ் கொள்ளை அமோகமாக நடக்கின்றது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கிறது