1. சொத்துக்களில் முதலீடு செய்யுங்கள் :
ரியல் எஸ்டேட், பொருட்கள் அல்லது சேவையை உற்பத்தி செய்யும் தொழில்களில் உற்பத்தி செய்யுங்கள். பண்ணை நிலங்களில் முதலீடு செய்யலாம். இந்த சொத்துக்களில் முதலீடு செய்வதால், ரொக்க பரிமாற்றம் அதிகரிக்கும். இது மறுமுதலீடு செய்ய அல்லது டிவிடெண்ட் தொகை திரும்ப செலுத்துவதற்கு உதவும். ஆக்கப்பூர்வ சொத்துக்களில் முதலீடு செய்தவதால், சந்தையின் செயல்திறனை சாராமல், குறிப்பிட்ட வருமானத்தை உருவாக்கும்.
2. நீண்டகால முதலீடுகளில் கவனம் செலுத்துங்கள் :
முதலீட்டாளர்கள், குறுகிய கால முதலீட்டை தவிர்த்து, நீண்ட கால முதலீடுகளில் கவனம் செலுத்தலாம். காலப்போக்கில் பங்குச்சந்தைகள் உயரும் என்பதால், நீண்டகாலத்திற்கு முதலீடு செய்திருப்போருக்கு உரிய பலன் கிடைக்கும்.
3. முதலீட்டை பரவலாக்குங்கள் :
முதலீட்டாளர்கள், முதலீட்டை பரவலாக்குவது மிக முக்கியம். பல்வேறு சொத்துகளில் முதலீடு செய்வதால், நஷ்டம் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கலாம். எந்த ஒரு முதலீடும் வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்பதால், பரவலாக்குதல் மூலம் ஆபத்தை குறைக்க இயலும்.
4. பங்குச்சந்தை போக்கிற்கு எதிர்வினையாற்றுவதை தவிருங்கள் ;
பங்குச்சந்தையின் ஏற்றத்தாழ்வுகளுக்கு உடனடியாக எதிர்வினையாற்றுவதை தவிர்க்க வேண்டுமென பப்,பெட் எச்சரிக்கிறார். தற்போதைய சூழலில், சந்தைகள் குறித்து மிகைப்படுத்தலில் அவசர முடிவுகளை எடுப்பது எளிது. சந்தை போக்கை, முதலீட்டாளர்கள் நிதானமாக கவனிப்பதுடன், நீண்ட கால முதலீடுகளின் மீது கவனம் செலுத்துவது நலம்.
5. வலுவான அடிப்படை பங்குகளில் முதலீடு :
முதலீட்டாளர்கள், வலுவான அடிப்படை கொண்ட நிறுவனங்களை தேர்ந்தெடுத்து, அவற்றின் பங்குகளில் முதலீடு செய்யலாம். பேலன்ஸ் சீட், நம்பகமான வருமானம் மற்றும் நல்ல தலைமை நிர்வாகிகளை கொண்ட நிறுவனங்கள், தற்போதைய பொருளாதார மந்தநிலையை சமாளிப்பதுடன், மறுபுறம் வளர்ச்சி காணும் திறன் கொண்டவையாக இருக்கும்.
அமெரிக்காவின் 500 மிகப்பெரிய நிறுவனங்களின் பங்குகள் சந்தைப்படுத்தப்படும், எஸ் & பி 500ல் முதலீடு செய்தவர்களுக்கு மூன்று ஆண்டுகளில், 34.39 சதவீதம் உயர்வையும், 5 ஆண்டுகளில் 52.47 சதவீதம் உயர்வும் திரும்ப கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!