Load Image
Advertisement

ராகுல் எதற்கும் அஞ்சமாட்டார்: பிரியங்கா பேச்சு

புதுடில்லி: ராகுலின் எம்.பி பதவி தகுதி நீக்கத்தை கண்டித்து டில்லியில் நடந்த சத்தியாகிரக போராட்டத்தில், இதற்கெல்லாம் அஞ்சக்கூடியவர் அல்ல, என் சகோதரர் ராகுல் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா பேசியுள்ளார்.

Latest Tamil News


ராகுல் எம்.பி பதவி தகுதி நீக்கத்தை கண்டித்து, டில்லி ராஜ்காட்டில் இன்று (மார்ச் 26) காங்கிரசார் சத்தியாகிரக போராட்டம் நடத்தினர்.

இதில் பிரியங்கா பேசியதாவது: ராகுலை சிறையில் தள்ளி குரலை நசுக்க பார்க்கிறார்கள். இதற்கெல்லாம் அஞ்சக்கூடியவர் அல்ல, என் சகோதரர் ராகுல். பிரதமர் மோடியும், பாஜ., தலைவர்களும் எனது தாயாரை பலமுறை இழிவுப்படுத்தியுள்ளனர்.

Latest Tamil News

அவர்கள் பார்லிமென்ட் எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யவில்லை. சிறைக்கு அனுப்பவில்லை. பல ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடுவதை நிறுத்தவில்லை. ஆனால் நாங்கள் அமைதியாக இருந்தோம். சத்தியத்திற்கு ஒரு சக்தி உண்டு; ஜனநாயகத்தை பாதுகாப்போம். இவ்வாறு அவர் பேசினார்.


வாசகர் கருத்து (53)

  • R Kay - Chennai,இந்தியா

    நாடு ராத்திரியில் மன நலம் குன்றியவர் நட்ட நடு ரோடில் எதற்கும் அஞ்சாமல் நடந்து செல்வதை நானும் பார்த்திருக்கிறேன்.

  • பேசும் தமிழன் -

    நீங்கள் எதற்கும் அஞ்சாத ஆட்கள் தான்.....ஊழல் செய்வது முதற்கொண்டு ....ஆனால் உங்களை கண்டு தான் நாட்டு மக்கள் பயப்படுகிறார்கள் !!!

  • R.MURALIKRISHNAN - COIMBATORE,இந்தியா

    எங்களுக்கு காங்கிரஸ் வேண்டவே வேண்டாம்-இந்திய மக்கள்

  • Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ

    ராகுல் வாயை அடக்க பயிற்ச்சி அளிக்கவும். தமிழகத்தில் நிதி குடும்பத்தை பத்தி பேசினா இரவோடு இரவாக கைதி 😀😀. கருத்துருமைய பத்தி தமிழக முதல்வர் பேசுவது சிரிப்புதான்.

  • g.s,rajan - chennai ,இந்தியா

    சும்மா இருந்த சிங்கத்தை சீண்டிவிட்டுட்டாங்க ....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement