காலிஸ்தான் ஆதரவாளர்கள் அட்டூழியம்: கனடா நாட்டு தூதருக்கு மத்திய அரசு ‛சம்மன்
புதுடில்லி: கனடா நாட்டில் காலிஸ்தான் உள்ளிட்ட பிரிவினைவாதிகளின் போராட்டங்கள் நடந்ததால், அந்நாட்டு தூதருக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பி, நடவடிக்கை எடுத்துள்ளது.

வட அமெரிக்க நாடான கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள ஹாமில்டன் நகரில் நிறுவப்பட்டுள்ள 6 அடி உயரம் உள்ள மஹாத்மா காந்தி சிலையை, 2012ல் நம் அரசு பரிசாக வழங்கியது. இந்நிலையில், இச்சிலையை காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் சேதப்படுத்தியதுடன், அதன் கீழே நம் நாட்டுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் வாசகங்கள் எழுதியுள்ளனர். மேலும், காலிஸ்தான் அமைப்புக்கு ஆதரவாகவும் வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.

இந்நிலையில், கனடா நாட்டு தூதருக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, கனடா தூதரை நேரில் அழைத்து கடும் அதிருப்தியையும், கடும் கண்டனத்தையும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளிப்படுத்தியது.
வாசகர் கருத்து (2)
கனடா, பிரிட்டன், அமெரிக்கா... போன்ற மேற்கத்திய நாடுகள் உழைத்து முன்னேறும் நாடுகளை வளர விடாது. (கடின உழைப்பை விரும்பி வாழ்ந்த ஜப்பான் மீது அணுகுண்டு வீசியது.) பாகிஸ்தான் பஞ்சாபிகள் மன்மோகன் சிங் போல் எப்போதும் பிரதமர் ஆக முடியாது. இஸ்லாமியருக்கு தான் முன்னுரிமை முக்கிய பதவி. அங்கு ஏன் பிரிவினை எண்ணம் வளரவில்லை. மதச்சார்பற்ற இந்தியாவை எப்படியும் மிரட்டலாம். உள்நாட்டு குழப்பம் உண்டு பண்ணலாம். இந்தியாவில் சுதேசி இயக்கம் வளர்ந்தால், வளர்ந்த நாடுகள் வறிய ( பஞ்ச ) நாடக மாறும்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
எல்லா அந்நிய சக்திகளையும் வெளியேத்துங்க.