கார்கே நிருபர்களுக்கு அளித்த பேட்டி: என்ன நடந்தாலும் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும். ராகுலை பாஜ., பேச விடுவதில்லை. ராகுல் தேசத்திற்காகவும், பொதுமக்களின் உரிமைக்காகவும் போராடுகிறார். நாங்கள் போராட்டத்தை நிறுத்த மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.
144 தடை உத்தரவு:
தடையை மீறி காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டதால், டில்லி ராஜ்காட் பகுதியில் 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் போராட்டம்
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் போராட்டம் நடந்தது.
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நடந்த உண்ணாவிரதம் ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சிவராஜசேகரன் தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் எம் பி அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் விஸ்வநாதன் ஆகியோர் கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
சென்னை தி.நகரில் மாவட்ட தலைவர் முத்தழகன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர் கோபண்ணா, விஜய் வசந்த் எம் பி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் துரை தலைமை வைத்தார். முன்னாள் தலைவர் தங்கபாலு மாநில நிர்வாகிகள் முருகானந்தம், தாமோதரன், கீழானூர் ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
வடசென்னை கி ழக்கு மாவட்ட தலைவர் எம்.எஸ். திரவியம் தலைமையில் திருவெற்றியூரில் சத்தியாகிரகம் போராட்டம் நடந்தது. முன்னாள் மாவட்ட தலைவர் டி.வி துரை ராஜ் உள்பட காங்கிரசார் பலர் கலந்து கொண்டனர்.
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தமிழக காங்கிரஸ் எஸ்சி துறை தலைவர் ரஞ்சன் குமார் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் இன்று நடந்தது.
டாக்டர் செல்லக்குமார் எம்பி, முன்னாள் மாவட்ட தலைவர் ரங்கபாஷ்யம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
டுவிட்டர் பயோ எனப்படும் சுயவிவரக் குறிப்பில், தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.பி. என மாற்றம் செய்துள்ளார் ராகுல்
ஒருவன் கொலை செய்தால் அவனுக்கு தண்டனை கொடுப்பார்கள் .....எனக்கு எப்படி தண்டனை கொடுக்கலாம் ... நான் மக்களிடம் நியாயம் கேட்பேன் என்பது .... எப்படி ஏற்றுக்கொள்ள முடியாதோ ....அதே போல தான் இதுவும்!!!!