மதப்பிரசாரம் செய்ய முயன்ற பால் தினகரன்: இலங்கையில் ‛ பாஸ்போர்ட் பறிமுதல்

இயேசு அழைக்கிறார் (ஜீசஸ் கால்ஸ்) என்ற அமைப்பை கிறிஸ்தவ மதபோதகர் பால் தினகரன் நடத்தி வருகிறார். இவர் கடந்த வாரம் வர்த்தக விசாவில் இலங்கைக்கு சென்றுள்ளார். அவருடன் அவரது ஜீசஸ் கால்ஸ் குழுவும் சென்றுள்ளது. இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள மணிபே மற்றும் ரசவின் பகுதிகளில் 3 நாட்கள் மதப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற உள்ளதாக ஜீசஸ் கால்ஸ் குழுவினர் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துள்ளனர். இதற்கு யாழ்ப்பாணத்தில் உள்ள சிவசேனா அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
புகார்:
வர்த்தக விசாவில் இலங்கை வந்துள்ள பால் தினகரன், இங்கு மதப் பிரச்சாரத்தில் ஈடுபட அனுமதிக்க கூடாது என சிவசேனா அமைப்பினர் அப்பகுதி மக்களிடையே வலியுறுத்தினர். இது குறித்து மணிபே பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட ஹிந்துக்கள், யாழ்ப்பாண போலீஸ் டிஐஜி.க்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளனர்.
பறிமுதல்:
அதன் படி, யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கு, வந்தடைந்த பால் தினகரன் மற்றும் அவருடைய குழுவினரை குடியேற்றத் துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு அவர்கள் அனைவரின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்தனர். மேலும், மதப் பிரச்சாரத்தில் ஈடுபடகூடாது என்று எச்சரித்து அனுப்பினர்.
வாசகர் கருத்து (62)
ஒவ்வரு ஏழைகளுக்கும் தலா 500 ரூபாய் வீதம் கொடுத்து நடிக்க சொல்லி கொடுப்பார்கள். இது தவிர பிரியாணி, மத வகையறாக்களை உண்டு. முடவனுக்கு கால் கிடைக்கும், குருடனுக்கு கண் பார்வை வரும், தீராத நோய்கள் தீரும் என்றெல்லாம் ஆசை வார்த்தை சொல்லி அப்பாவிகளை ஏமாற்ற வைத்து, தொழில்கள் செய்வது இவங்களுக்கு கய் வந்த கலை. எல்லா நோயும் தீர்ந்து, எல்லாரும் வசதி வருமானால், அவர்கள் மதத்தில் இவளவு ஏழைகள் எப்படி?
புடிச்சி உள்ளே போடுங்க சார் ....
இந்த கும்பல் திருந்தவே திருந்தாது. இங்கு செய்யும் அட்டூழியத்திற்கு சப்பை கட்டு கட்ட ஓசி பிரியாணிகள் அதிகம். அங்கு பப்பு வேகல.
இலங்கை என்ன தமிழ்நாடா.....இஷ்டப்படி மதமாற்றம் செய்ய......அவர்கள் விவரமாக தான் இருக்கிறார்கள் .....நான் தான் டாஸ்மாக் போதையில் மதிமயங்கி போய் இருக்கிறோம்.
மத வெறி பிடித்த வளவன் மற்றும் சேப்பாக்கம் ...எங்கே ?