புத்திசாலித்தனம் மேம்பட்டு திகழும் உன்னதமான காலம் துவங்கப்போவதை 5000 ஆண்டுகளுக்கு முன்னரே கிருஷ்ணர் எவ்வாறு உணர்ந்தார் என்பதை விளக்குகிறார் சத்குரு.
நான்கு யுகங்களின் சுழற்சியின் பின்னணியில் உள்ள அறிவியல் பற்றி விவரிப்பதுடன், குருச்சேத்திர போர் முடிவுற்று கலியுகம் துவங்கியது முதல் உள்ள காலவரிசையையும் கணக்கிடுகிறார் சத்குரு.
வானிலும் மனித உடலிலும் நிகழும் சுழற்சிகள்
சத்குரு: யோக வானியலில், சூரியனை சுற்றி வரும் பூமியின் சுற்றுப்பாதையை நாம் 27 பகுதிகளாக பிரித்துள்ளோம் - அவைகளே நட்சத்திரங்கள் எனப்படும்.
ஒவ்வொரு நட்சத்திரமும் மேலும் நான்கு சம பங்காக பிரிக்கப்பட்டுள்ளன - அவை பாதம் எனப்படும். நான்கையும் இருபத்தேழையும் பெருக்கினால் வருவது 108. விண்மண்டலத்தில் பூமி 108 படிகளை கடந்து செல்வதை இந்த 108 பாதங்கள் குறிக்கிறது. பூமியை சுற்றி வரும் நிலவின் சுற்றுப்பாதையின் ஒரு பாதி அளவுக்கு ஒவ்வொரு நட்சத்திரமும் ஒத்திருக்கிறது. மனித உடலில் நிகழும்
சுழற்சிகள் அதற்கேற்பவும் அதற்கு பதிலளிக்கும் விதத்திலும் இருக்கிறது.
நட்சத்திரங்களும் பாதங்களும்
ஒரு நல்ல ஆரோக்கியமான பெண்ணின் உடலில் சுழற்சிகள் வெளிப்படையாக 27.55 நாட்களுக்கு ஒரு முறை நிகழ்கிறது. இதுவே, ஒரு ஆணின் உடலில் நடக்கும் சுழற்சிகள் வெளிப்படையானதாக குறிப்பிடத்தகுந்த வகையில் நிகழாது - அது வேறு விதமானதாக நீண்ட கால அளவை எடுத்துக் கொள்வதாக இருக்கிறது. எது எப்படி இருந்தாலும், இந்த சுழற்சிகள் இந்த சூரிய மண்டலத்திலும், இந்த பிரபஞ்சம் முழுமையிலும் எல்லா காலங்களிலும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. நுண்ணுயிரும் பேரண்டமும் ஒரே விளையாட்டைத்தான் விளையாடுகின்றன. ஆனால் யார் விளையாட்டை யார் விளையாட வேண்டும்? உங்கள் விளையாட்டை பேரண்டம் விளையாடப்போகிறது என்று நீங்கள் நினைத்தால், உங்கள் வாழ்க்கையை நீங்கள் வீணடித்துவிடுவீர்கள். நீங்கள் பேரண்டத்தின் விளையாட்டை
விளையாடினால், உங்கள் எதிர்பார்ப்புகளையெல்லாம் மிஞ்சும் வகையில் உங்கள் வாழ்க்கை நிகழும்.
நான்கு யுகங்களின் சுழற்சி
பூமியின் சுழற்சியால் துல்லியமாக நிகழும் இரு சம பகலிரவு நாட்களுக்கு (equinox) இடையே உள்ள கால அவகாசமே இராசி மண்டலம் முழுவதையும் ஒருமுறை சுற்றிவர பூமியின் அச்சு எடுத்துக் கொள்ளும் கால அளவு. இராசி மண்டலத்தின் ஒரு பாகையைக் கடக்க பூமிக்கு 72 வருடங்கள் ஆகிறது. 360 பாகைகளையும் கடந்து ஒரு சுழற்சியை முடிக்க 25,920 வருடங்கள் எடுத்துக்கொள்கிறது. இதில் ஒரு பாதியை கடக்க 12,960 வருடங்கள் பிடிக்கிறது. அதில் நான்கு யுகங்களும் அடங்கும். சத்தியயுகம் 5,184 வருடங்களும், திரேதயுகம் 3,888 வருடங்களும், துவாபரயுகம் 2,592 வருடங்களும், கலியுகம் 1,296 வருடங்களும் நிகழும். இந்த நான்கு யுகங்களை மொத்தமாக கணக்கிட மொத்தம் 12,960 வருடங்கள் வருகிறது.
துவங்கியது?
மஹாபாரத கதையை ஒரு குறிப்பிட்ட சூழலோடு நாம் பார்க்க வேண்டியிருக்கிறது. கி.மு.3140-ல் குருச்சேத்திர போர் முடிவுற்றது. கி.மு.3102-ல் கிருஷ்ணர் தன் உடலை நீங்கினார். போர் முடிந்து மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு பிறகு கலியுகம் தொடங்கியது. கி.பி.2012 வரை கிருஷ்ணரின் காலம் முடிவுற்று 5,114 ஆண்டுகள் ஆகிவிட்டன. நீள்வட்டமாக திகழும் பூமியின் அச்சு சுழலோட்டத்தின் முடிவுப் பகுதியில் நிகழும் கலியுகங்கள் இரண்டையும் கூட்டினால் வரும் 2,952 வருடங்களை 5,114-ல் இருந்து கழித்தால் வருவது 2,522 வருடங்கள். இதற்கு அர்த்தம், நாம் ஏற்கனவே துவாபரயுகத்தில் 2,522 வருடங்களை கடந்துவிட்டோம் என்பதுதான். துவாபரயுகத்தின் மொத்த காலம் 2,592 வருடங்கள் என்பதால், அந்த யுகம் முடிய இன்னும் நமக்கு 70 வருடங்கள் உள்ளன. 2082-ஆம் ஆண்டில் துவாபரயுகத்தை பூர்த்தி செய்து நாம் திரேதயுகம் நோக்கி நகர்வோம். இந்த உலகம் மற்றுமொரு எழுச்சியை சந்திக்கும். அது போராக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. நல்வாழ்வு மற்றும் மேழெழுந்த விழிப்புணர்வை மனிதர்களுக்கு நல்கும் புது யுகத்தில் நுழைவதற்கு முன் அநேகமாக பெரும் மக்கள்தொகை அதிகரிப்பு மற்றும் இயற்கை
பேரழிவுகள் நிகழக்கூடும்.
யுகங்களும் மனித விழிப்புணர்வும்
இந்த சூரிய மண்டலமும், சூரியனை மையமாகக்கொண்டு சுழலும் அதன் கோள்களும் இணைந்து விண் மண்டலத்தில் பெரும் நட்சத்திரம் ஒன்றை மையமாகக்கொண்டு சுழன்று வருகிறது. நம் சூரிய மண்டலம் ஒரு முறை அந்த பெரும் நட்சத்திரத்தை வலம் வர 25,920 வருடங்கள் பிடிக்கிறது. இந்த பூமியின்மீது அது ஏற்படுத்தும் விளைவுகளை பார்க்கும்போது, நம் சூரிய மண்டலம் மையமாக கொண்டு சுற்றி வரும் அந்த பெரிய நட்சத்திரம் அல்லது பெரிய
அமைப்பானது, சுற்றுப்பாதையின் மையத்தில் அமையவில்லை, ஆனால் ஒருபக்கமாக இருப்பதாக நம்பப்படுகிறது. நம் சூரிய மண்டலம் எப்போதெல்லாம் இந்த பெரிய அமைப்பின் அருகாமையில் செல்கிறதோ அப்போதெல்லாம் நம் அமைப்பில் வாழும் எல்லா உயிரினங்களும் ஒரு உயர்ந்த சாத்தியத்தை நோக்கி எழுகிறது. எப்போதெல்லாம் நம் அமைப்பு அதிலிருந்து விலகிச் செல்கிறதோ அப்போது இங்கு வாழும் உயிரினங்கள் மிகத் தாழ்ந்த நிலையிலான சாத்தியத்துக்கு செல்கின்றன - இதையே நாம் கலியுகம் என்கிறோம்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!