Load Image
Advertisement

காஞ்சியில் தொடரும் டீன் ஏஜ் கர்ப்பம்: ஆறு மாதங்களில் மூன்று சிறுமியர் பாதிப்பு

காஞ்சிபுரம்: குழந்தைகளை பாதுகாக்கும் வகையில், பல்வேறு சட்டப்பூர்வமான அமைப்புகளும், அரசு துறைகளும், அதிகாரிகளும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல், சுரண்டல், குழந்தை திருமணம் என பல வகையில் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.
இதில், குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் பிரச்னைகளே தொடர்ந்து அதிகரிக்கின்றன. அதுவும் பெண் குழந்தைகள், வளரிளம் பருவத்திலேயே பாதிப்பதால், வாழ்க்கை முழுதும் பல்வேறு சிரமங்களை சந்திக்க நேரிடுகிறது.

Latest Tamil News


காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரையில், பள்ளி மாணவியர் சிலர், 'டீன் ஏஜ்' வயதிலேயே, வழி தவறி செல்வதால், கர்ப்பமாவதும், குழந்தை பெற்றெடுக்கும் சம்பவங்களும்ஏற்பட்டு வருகின்றன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த ஆறு மாதங்களில் மட்டும், மூன்று பள்ளி மாணவியர், கர்ப்பமடைந்த வழக்கில், சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம் அருகே வசிக்கும் நபரின், 12 வயது மகள் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். அப்பகுதியில் ஆட்டோ ஓட்டும் ரஞ்சித், 26, என்பவர், சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி, பலாத்காரம் செய்ததில், கடந்த அக்டோபர் மாதம், சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதில், ரஞ்சித்தை போலீசார் கைது செய்தனர்.

குருவிமலை பகுதியில் வசிக்கும்,14 வயது சிறுமி, காஞ்சிபுரத்தில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இவரிடம் காத்தவராயன் என்பவர் பழகி வந்த நிலையில், சிறுமி கர்ப்பமாகி உள்ளார்.
இதுகுறித்து கடந்த டிசம்பர் மாதம் பெற்றோர் அளித்த புகாரில், காத்தவராயனை போலீசார் கைது செய்தனர்.

புள்ளலுார் கிராமம் அருகே, 14 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். கோவிந்தவாடி கிராமத்தைச் சேர்ந்த, கல்லுாரி மாணவன் லோகநாதன் என்பவருடன் சிறுமி பழகி வந்துள்ளார். இந்நிலையில், சிறுமி மூன்று மாதம் கர்ப்பமாகியுள்ளார். பெற்றோர் அளித்த புகாரில், லோகநாதன் கைது செய்யப்பட்டார்.
கடந்த ஆறு மாதங்களில் மட்டும், மூன்று பள்ளி மாணவியர் கர்ப்பமான சம்பவத்தில், ஒரு சிறுமி குழந்தையும் பெற்றெடுத்துள்ளார்.

Latest Tamil News

'டீன் ஏஜ்' வயதில் ஏற்படும் இதுபோன்ற கர்ப்பமாகும் சூழல், அவர்களின் எதிர்காலத்தை பாதிக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள், அவர்களின் பெற்றோருக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்துகிறது. பெண் குழந்தைகள் பாலியல் ரீதியாக பாதிக்கும் முன்பாகவே அவற்றை தடுக்க வேண்டிய கடமை பெற்றோருக்கு உள்ளது.

பெற்றோர் தங்களின் குழந்தைகள் மீது முழு கவனம் செலுத்தி, அவர்களை கண்காணித்து பாதுகாக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் நிகழ பெற்றோரின் கவனக்குறைவும் ஒரு காரணமாக அமைகிறது.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சக்திகாவ்யா கூறியதாவது:
பெற்றோர் குழந்தைகளிடம் நேரம் செலவிட வேண்டும். அவர்களிடம் செலவிடும் நேரம் குறைய கூடாது. நிறைய விஷயங்கள் பெற்றோரே சரி செய்ய வேண்டும். குழந்தைகளின் தேவையை பூர்த்தி செய்ய பணி நிமித்தமாக ஓடுகிறார்கள்.
இருப்பினும், கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும். 'செல்போன்' உபயோகம் குறித்து, தெளிவாக தெரிவிக்க வேண்டும். அது தெரியாத பட்சத்தில், தவறாக செல்ல வாய்ப்புள்ளது. ஆசிரியர்கள் தங்களது பங்களிப்பை நன்றாக செய்கிறார்கள்.

பெற்றோரிடம் தான் அதிக பொறுப்பு உள்ளது. பிள்ளைகளை எப்படி நடத்துகிறோம் என்பதில் தான் உள்ளது. பிள்ளைகளை பெற்றோர் மதிக்க வேண்டும்.
காரணங்களை புரிய வைக்க முயற்சிக்க வேண்டும்; அவர்களும் புரிந்து கொள்வார்கள். நாங்கள் பள்ளிகளில், மாணவ - மாணவியரிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து (15)

 • Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா

  இது கலி காலம்

 • g.s,rajan - chennai ,இந்தியா

  நல்ல வேளை, இந்தியாவில இந்த டீனேஜ் லெவல்ல இன்னும் லிவிங் டுகெதர் கலாச்சாரம் வரல....

 • g.s,rajan - chennai ,இந்தியா

  இந்த சின்ன வயசுலேயே நிறையா டாக்டருங்களுக்கு பட்டம் வாங்கிக் கொடுத்துடுவாங்க போல இருக்கு....

 • Pandi Muni - Johur,மலேஷியா

  கிறிஸ்தவம் தலை விரித்து ஆடுகிறது

 • g.s,rajan - chennai ,இந்தியா

  காஞ்சியில் ஒரு புத்தன் பிறந்துமா இப்படி நடக்குது ... ???

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்