மாணவி மாயம்
சங்கராபுரம், : சங்கராபுரம் அருகே காணாமல் போன மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.
சங்கராபுரம் அடுத்த நெடுமானுார் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த 24ம் தேதி முதல் அவரை காணவில்லை.
அக்கம் பக்கம், உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்காததால், அவரது தந்தை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து மாணவியை தேடி வருகின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!