Load Image
Advertisement

காசுக்கு நாங்க எங்க போவோம்? புலம்பும் பாக்., ராணுவ அமைச்சர்!

இஸ்லாமாபாத்:''பாகிஸ்தானில் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு அரசிடம் பணம் இல்லை,'' என, அந்நாட்டு ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்து உள்ளார்.
Latest Tamil News

நம் அண்டை நாடான பாகிஸ்தானில், கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அங்கு, பெட்ரோல், டீசல், அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வர, பாக்., அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதற்கிடையே, 'பாகிஸ்தானில் விரைவில் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும்' என, முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தொடர்ந்து போராட்டங்கள் வாயிலாக வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில், ''பாகிஸ்தானில் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு அரசிடம் பணம் இல்லை,'' என, அந்நாட்டு ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் இஸ்லாமாபாதில் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

பாகிஸ்தானில் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு போதுமான பணம், நிதியமைச்சகத்திடம் இல்லை. இதனால் தற்போது தேர்தல் நடத்துவது சாத்தியமில்லை. முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கூறி வரும் கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை.

அவர், நம்பிக்கையில்லா ஓட்டெடுப்பின் வாயிலாக, அரசியலமைப்பு ரீதியாக பிரதமர் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால் இதை ஏற்றுக் கொள்ள முடியாமல் புலம்பி வருகிறார்.
Latest Tamil News
ஒவ்வொரு நாளும் இம்ரான் கான் உருவாக்கும் நெருக்கடிகளை, நாங்கள் திறம்பட சமாளித்து வருகிறோம். பொருளாதார நெருக்கடியில் இருந்து, பாகிஸ்தான் விரைவில் மீளும்.

இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து (14)

  • Milirvan - AKL,நியூ சிலாந்து

    இஸ்ரேல் கிட்ட கெஞ்சி ஒரு பகுதிய வித்து திங்க முயற்சிக்கலாமே?

  • Fastrack - Redmond,இந்தியா

    இந்த அமைச்சர்களும் அதிகாரிகளும் கோட்டும் சூட்டுமா யாசகம் பண்ணினா தட்டில் பணம் விழுவதில்லை .. ராப்பிச்சைக்காரன் கெட்டப்பில் முயன்று பார்க்கலாம்

  • theruvasagan -

    அடப் பாவமே. கிங்பின் அனுப்பிச்ச நோட்டடிக்கும் மெஷின் வேலை செய்யலயா. அவரையே கேட்டு பாருங்க. வேற வில்லங்கமான ஐடியா எதுனாச்சும் குடுப்பாரு. பொருளாதார புலியாச்சே.

  • g.s,rajan - chennai ,இந்தியா

    திருவோடு ஏந்துங்க ....

  • Nellai tamilan - Tirunelveli,இந்தியா

    வழக்கம் போல அம்மா தாயே ஆரம்பிக்க வேண்டியது தான்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்