ADVERTISEMENT
புதுடில்லி:'லோட்டஸ் சர்ஜிக்கல்ஸ்' நிறுவனத்தை, 348 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்த, 'முருகப்பா குழுமம்' மற்றும் 'பிரேம்ஜி பவுண்டேஷன்' ஆகிய இரண்டும் இணைந்துள்ளன.
முருகப்பா குழுமத்தின் பொறியியல் நிறுவனமான டி.ஐ.ஐ., எனப்படும் 'டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆப் இந்தியா' மற்றும் அசீம் பிரேம்ஜி பவுண்டேஷனைச் சேர்ந்த 'பிரேம்ஜி இன்வெஸ்ட்' ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து, லோட்டஸ் சர்ஜிக்கல்ஸ் நிறுவனத்தை, 348 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்த உள்ளன.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
லோட்டஸ் சர்ஜிக்கல்ஸ், மருத்துவ அறுவை சிகிச்சைகளுக்கு தேவையான பொருட்களை தயாரிக்கும் நிறுவனமாகும். டி.ஐ.ஐ., 233 கோடி ரூபாயும், பிரேம்ஜி இன்வெஸ்ட் 115 கோடி ரூபாயும் முதலீடு செய்து, லோட்டஸ் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை பெற உள்ளன.
இதனடிப்படையில் டி.ஐ.ஐ., 67 சதவீத பங்குகளையும், பிரேம்ஜி இன்வெஸ்ட் 33 சதவீத பங்குகளையும் பெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!