_அனராக், ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனம்.
அண்மைக் காலமாக, 40 லட்சம் ரூபாய்க்கு குறைவான மதிப்பு கொண்ட மலிவு விலை வீடுகளுக்கான தேவைகள் குறைந்து வருவதாக, ரியல் எஸ்டேட் துறையை சேர்ந்த நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, மொத்த வீடுகள் வினியோகத்தில், மலிவு விலை வீடுகளுக்கான தேவை குறைந்து வருகிறது.
தேவை குறைய காரணம்:
• நிலத்தின் விலை அதிகரிப்பு
• உள்ளீட்டு செலவுகள் உயர்வு
• குறைந்த லாப வரம்பு
• குறைந்த வட்டியில் போதுமான நிதி கிடைக்காதது
மொத்த வீடுகள் வினியோகம் (7 முக்கிய நகரங்களில்) ஆண்டு வீடுகள் எண்ணிக்கை
2018: 1,95,300
2019 : 2,36,560
2020 : 1,27,960
2021: 2,36,700
2022 : 3,57,650
மொத்த வீடுகளில் மலிவு விலை வீடுகளின் பங்கு:
2018: 40 சதவீதம்
2019: 40 சதவீதம்
2020: 30 சதவீதம்
2021: 26 சதவீதம்
2022: 20 சதவீதம்
-____
வீடுகளுக்கான தற்போதைய தேவை, 40 லட்சம் முதல் 1.5 கோடி ரூபாய் வரையிலான விலை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மாறியுள்ளது.
_____
இன்று மலிவு விலை வீடுகளுக்கான சந்தை மந்தமாக இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் மிக முக்கியமான ஒன்று, நிலத்தின் விலை. நிறுவனங்கள் அந்த செலவை, நடுத்தர மற்றும் பிரீமியம் வகை வீடுகளை கட்டி விற்பதன் வாயிலாகவே மீட்க முடிகிறது.
_அனுஜ் பூரி, தலைவர், அனராக்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!