Load Image
Advertisement

அவலான் டெக்னாலஜிஸ் ஏப்ரல் 3ல் பங்கு வெளியீடு

Avalon Technologies IPO on April 3   அவலான் டெக்னாலஜிஸ்  ஏப்ரல் 3ல் பங்கு வெளியீடு
ADVERTISEMENT
புதுடில்லி:மின்னணு உற்பத்தி சேவை நிறுவனமான 'அவலான் டெக்னாலஜிஸ்' நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, ஏப்ரல் 3ம் தேதியன்று துவங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக 865 கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டுள்ளது. பங்கு வெளியீடு, ஏப்ரல் 3ம் தேதி துவங்கி, 6ம் தேதியுடன் முடிவடைகிறது.

துணிகர முதலீட்டாளர்களுக்கான பங்கு விற்பனை, மார்ச் 31ல் நடைபெற உள்ளது.

இந்நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கான அனுமதியை, கடந்த ஜனவரியில் வழங்கியது பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான 'செபி!'

இந்நிறுவனம், இதற்கு முன் 1,025 கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது அதை 865 கோடி ரூபாயாக குறைத்துக் கொண்டுள்ளது.

பங்கு வெளியீட்டின்போது, 320 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பங்குகளையும்; 545 கோடி ரூபாய் மதிப்பிலான நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்கள் வசம் இருக்கும் பங்குகளையும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

புதிய பங்குகளை விற்பனை செய்வதன் வாயிலாக கிடைக்கும் தொகையை, கடனை அடைக்கவும், நடைமுறை மூலதன தேவைகளுக்கும், பொதுவான நிர்வாக செலவுகளுக்கும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

கடந்த 1999ல் துவங்கப்பட்ட இந்நிறுவனத்துக்கு, இந்தியா மற்றும் அமெரிக்காவில், மொத்தம் 12 தொழிற்சாலைகள் உள்ளன.

கடந்த நிதியாண்டில், இந்நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 840 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement