Load Image
Advertisement

ரேஷனில் செறிவூட்டிய அரிசி விநியோகம் : பிளாஸ்டிக் அரிசி என்று குழப்பத்தில் மக்கள்

Distribution of enriched rice in ration: People confused about plastic rice   ரேஷனில் செறிவூட்டிய அரிசி விநியோகம் : பிளாஸ்டிக் அரிசி என்று குழப்பத்தில் மக்கள்
ADVERTISEMENT
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் சப்ளை செய்யப்படும் இலவச அரிசி மற்றும் பள்ளிகளுக்கு சத்துணவுக்காக வழங்கப்படும் அரிசி உள்ளிட்டவைகளில் 100 கிலோ அரிசிக்கு ஒரு கிலோ செறிவூட்டப்பட்ட அரிசி கலந்து ரேஷன் கடைகள் மூலம் பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

ரேஷன் கடைகளில் இருந்து புழுங்கல் அரிசி மற்றும் பச்சரிசி வாங்கி செல்லும் பொதுமக்கள் அரிசியில் கலக்கப்பட்டுஉள்ள மாற்று அரிசி வழக்கமான அரிசியுடன் மாறுபட்டுள்ளதாலும், அவை தண்ணீரில் பிளாஸ்டிக் போன்று வழவழப்பு தன்மையுடன் காணப்படுவதால், பெரும்பாலான பொதுமக்கள் அரிசியில் கலப்படம் உள்ளதாகவும்,அந்த அரிசியால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் அச்சத்துடன் குழப்பம் அடைகின்றனர்.

இதுகுறித்து அதிகாரிகளோ, ரேஷன் கடை விற்பனையாளர்களோ பொது மக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தாததால், அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலப்படம் உள்ளதாக பொதுமக்கள் கருதுகின்றனர். எனவே, அரிசியில் கலக்கப்பட்டு வரும் செறிவூட்டப்பட்ட அரிசி குறித்து உணவு பாதுகாப்பு துறை மற்றும் வட்ட வழங்கல் துறை அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

கலப்பட அரிசி குறித்து வட்ட வழங்கல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், செறிவூட்டப்பட்ட ஊட்டச்சத்து அரிசியில் வைட்டமின் ஏ, பி1, பி2, பி3, பி6, பி12, போலிக் அமிலம், இரும்பு சத்து மற்றும் துத்தநாக சத்து ஆகிய 9 சத்துக்கள் அடங்கியுள்ளன.

உடலில் ஏற்படும் சத்து குறைபாட்டை ஈடு செய்வதற்காக, அரிசியுடன் தேவையான சத்துக்களை சேர்த்து கூழாக்கி அதை மீண்டும்அரிசியை போலவே மாற்றி வழக்கமான அரிசியுடன் கலந்து விற்பனை செய்யப்படுகிறது. இதனால், பாதிப்பு ஏதுமில்லை, என்றார்.


வாசகர் கருத்து (1)

  • raghavan - Srirangam, Trichy,இந்தியா

    அப்படியா? இதற்கு Fssai உரிமம் இருக்கா? தயாரிப்பு தேதி, காலாவதி தேதி போட்டு பாக்கெட்டுகளில் விற்பனை செய்ய முடியாதா? ஏழைகளின் உயிர் வெறும் ஓட்டு போட மட்டும்தானா? அவர்கள் மனிதர்கள் இல்லையா?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement