இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு
சென்னை-சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை:
வளிமண்டல கீழடுக்குகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், வேலுார், திருப்பத்துார், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், மழைக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், ஒரு சில இடங்களில், மார்ச் 28 வரையிலான நான்கு நாட்களுக்கு, இடி மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில், அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக காணப்படும். ஒருசில இடங்களில், இடி மின்னலுடன், லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!