Load Image
Advertisement

அறநிலையத் துறை ஆக்கிரமிப்பு? பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!

சென்னை-கோவில் நிலங்களை அறநிலையத் துறையே ஆக்கிரமித்திருப்பதாக கூறப்படும் புகார் குறித்து பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Latest Tamil News

கோவில்களின் நிதியில் கல்லுாரிகள் துவங்குவதை எதிர்த்தும், கோவில் நிதியை தவறாக பயன்படுத்த தடை விதிக்கக் கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில், ஆலய வழிபடுவோர்சங்கத் தலைவர், டி.ஆர்.ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இவ்வழக்கு, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, 'பொது நிதியில் இருந்து மேற்கொண்ட செலவு விபரங்களை கேட்டு, தகவல் உரிமை சட்டத்தின் கீழ் அளித்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
Latest Tamil News
'மதுரை மீனாட்சி அம்மன், திருச்செந்துார் முருகன், திருவானைக்காவல் கோவில்களின் நிலங்களில், அறநிலையத் துறை மண்டல இணை கமிஷனர் அலுவலகங்கள் கட்டப்பட்டுள்ளன. அதற்கு வாடகை தருவதில்லை.

'கோவில் நிலங்களை அறநிலையத் துறையே ஆக்கிரமித்துள்ளது' என, மனுதாரர் தெரிவித்தார்.

இதையடுத்து, மனுதாரரின் புகார் குறித்து, அறநிலையத் துறை பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.


வாசகர் கருத்து (9)

  • P BABU - Chennai ,இந்தியா

    மற்ற மத நிர்வரகத்தை போன்று கோவில் நிர்வாகத்தை இந்து உள்ளூர் மக்களின் நிர்வாகத்தின் கீழ் வோட்டெடுப்பு முறையை பின்பற்றி ஆன்டுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்க வேன்டும், சட்டத்துறையின் வழிக்காட்டுதலின் கீழ் நிர்வாகம் அமைந்தால் நன்று

  • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

    அறநிலையத்துறை அலுவலகங்களுக்கு வாடகை தரவேண்டும் என்று நீதிமன்றம் ஆணை பிறப்பித்தாலும்கூட அதையும் உண்டியல் காசை திருடிதான் தருவார்கள்

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    இந்த அறநிலயத்துறை செய்யும் அடாவடி, ஊழல், ஹிந்து கோவில்களை பாழாக்குவது என்று செய்யும் அறமற்ற செயலுக்கு கணக்கில்லயா...என்று ஒழியும் இந்த அறநிலையத்துறை...

  • jss -

    திருடன் கிட்டையே நீ திருடினாயா என்று கேட்பது போல் உள்ளது.

  • shyamnats - tirunelveli,இந்தியா

    ஆட்சியாளர்களை பொறுத்தும் அதிகாரிகள் பார்வைகளும், செயல்பாடும் மாறுபடுகிறதைத்தான் பார்க்கிறோமே? இந்து மதத்தில் மட்டும்தான் அரசின் குறுக்கீடு உள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்