ராகுலை ஒழிக்க காங்.,கில் சதி!

இது குறித்து, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காங்கிரஸ் கட்சியில் மிகப் பெரிய வழக்கறிஞர்கள் பிரிவு உள்ளது. ஆனாலும், சூரத் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக காங்கிரஸ் கட்சி இன்னும் மேல்முறையீடு செய்யவில்லை. இந்த வழக்கில் ராகுலுக்கு சரியான அறிவுரை வழங்கி வழிநடத்த கட்சியில் ஒருவர் கூடவா இல்லை.

ராகுலை ஒழிக்க காங்கிரஸ் கட்சிக்குள் நடந்த சதித்திட்டத்தால் தான், அவர் இன்று தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதை புரிந்து கொண்டு, தனக்கு எதிராக கட்சிக்குள் குழி தோண்டுபவர் யார் என்பதை ராகுல் கண்டுபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (33)
1) நாம் என்ன வேண்டுமானாலும் கீழ்த்தரமாக அல்லது உயர்ந்த தரமாக நினைக்கலாம் ஆனால் வாயில் அந்த வார்த்தை வரும் போது சுய கட்டுப்பாடு, சரியான ஆய்வு, அறிவாளித்தனம் இருக்கவேண்டும் 2) இது கொஞ்சம் கூட இப்போதைய அரசியல் வியாதிகளுக்கு இல்லவே இல்லை???எப்போது பார்த்தாலும் பாராளுமன்றம் முடக்கம்???எதற்கு???ஏதோ செய்யவேண்டும் என்று இந்த மாதிரி செய்தல் 3) அரசியல்வியாதிகள் சொல்வது என்ன மோடியை ஆட்சியிலிருந்து நீக்க வேண்டும் நிஜேப் ஆட்சியை ஒழிக்கவேண்டும். யரினாலாவது மக்களே உங்களை நல்வழிப்படுத்த உங்கள் வாழ்வு வளம் பெற நாடு உன்னத நிலைக்கு செல்ல எங்களுக்கு ஒட்டு போடுங்கள் என்று ஒரு தடவை ஒரு கட்சி கேட்டிருக்குமா இல்லவே இல்லை மோடியை ஒழிக்கவேண்டும் பிஜேபியை தோற்கடிக்கவேண்டும் இது ஒன்றே அவர்கள் வாயில் என்றும் எப்போதுm எவ்வழியிலும் வரும் ஒரே வார்த்தை
நாட்டையும், மக்களையும் முன்னேற்ற பாதையில் எடுத்துச்செல்ல காங்கிரசில் மீதமுள்ள நல்ல தலைவர்கள் பாரதீய ஜனதா பார்ட்டியுடன் இணைந்து செயல்படவேண்டும். எதற்கெடுத்தாலும் எதிர்ப்பு கூறி போராட்டம் நடத்துவது, பாராளுமென்றத்திலிருந்து வெளிநடப்பு செய்வது, பாராளுமன்ற செயல்பாடுகளை புறக்கணிப்பது போன்ற எதிர்ப்பு தன்மைகளை விட்டு, மக்களுக்கு நல்லவைகளை செய்ய முன்வரவேண்டும். நன்றி.
சதியை முறியடிக்க பாஜக ராகுலுக்கு உதவுமா.....
சொல்லிக்கொடுத்த பேச்சும் கட்டிக்கொடுத்த சோறும் எத்தனை நாளைக்கி ?
Unfortunately I am a MP என்று சொன்னார்... அவர் வருத்தம் தீர நீதிமன்றம் உதவியாக இருந்தது...