தி.மு.க.,வினர் சொத்துப்பட்டியல் ஏப்., 14ல் வெளியிடப்படும் பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேச்சு
தென்காசி;''ஏப்., 14ல் தமிழகத்தின் அமைச்சர்கள் உட்பட தி.மு.க.,வைச் சேர்ந்த 27 முக்கிய புள்ளிகளின் சொத்து பட்டியல் வெளியிடப்படும்,''என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
தென்காசியில் நேற்று இரவு நடந்த பா.ஜ., பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது:
தமிழகத்தில், 15 மாதிரி பள்ளிகளை இந்த மாதம் துவக்கினர். அதில் மாணவர் சேர்க்கைக்கு மார்ச் 4ல் நுழைவுத் தேர்வு நடத்தினர். நுழைவுத்தேர்வு நடத்திய பிறகு கல்வி அமைச்சர் மார்ச் 7ல் அவ்வாறு நுழைவுத் நடத்தப்பட மாட்டாது என்கிறார். இது தி.மு.க.,வின் பித்தலாட்டம்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லுாரிக்கு, 150 மாணவர்கள் சேர்க்கை நடந்து அவர்கள், ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் படிக்கின்றனர். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 1,900 கோடி ரூபாய் செலவில் அமைய உள்ளது.
ஏப்., 14ல் தி.மு. க., அமைச்சர்கள் எம்.எல்.ஏ.,க்களின் சொத்து பட்டியலை வெளியிட உள்ளோம். தி.மு.க., புள்ளிகள் 27 பேரின் சொத்து மட்டுமே, 2 லட்சத்து 24 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். தமிழகத்தின் மொத்த வருமானத்தில் பத்து சதவீதம் தி.மு.க.,வின் 27 பேரிடம் உள்ளது. அவர்களில் சிலர் அமைச்சர்கள்.
இவர்களில் ஒருவர் துபாயில் கம்பெனி நடத்துகிறார். ஒருவர் துறைமுகம் நடத்துகிறார். கர்நாடகாவில், நிறுவனம் முழுதும் ஒருவரின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஒருவர் ஆப்பிரிக்காவில் குடிநீர் ஆலை நடத்துகிறார்.
ஒருவர் லண்டனில் மனைவி பெயரில் மூன்று நிறுவனங்கள் பதிவு செய்துள்ளார். தமிழ்ப் புத்தாண்டு ஊழலுக்கு எதிரான திருவிழாவாக இருக்கும். காங்., தலைவர் அழகிரி உடன் மூன்று பேர் ரயிலை மறிக்க சென்றனர்.
மாணவர்களின் லேப்டாப் நிதியில் நினைவு சின்னம் வைக்க ஆரம்பித்த நாளிலேயே தி.மு.க., அழிய ஆரம்பித்து விட்டது. காமராஜரையே அவர் சுவிட்சர்லாந்தில் வீடு வாங்கியதாக அப்போது குற்றம் சாட்டியவர்கள் தி.மு.க.,வினர்.
இவ்வாறு அவர் பேசினார்.

மத்தியில் 2010ல் காங்., ஆட்சியில் 'நீட்' தேர்வு வேண்டுமென கொண்டு வந்தது சுகாதாரத்துறை இணை அமைச்சராக இருந்த தி.மு.க.,வின் காந்தி செல்வன்.
தமிழகத்தில், 15 மாதிரி பள்ளிகளை இந்த மாதம் துவக்கினர். அதில் மாணவர் சேர்க்கைக்கு மார்ச் 4ல் நுழைவுத் தேர்வு நடத்தினர். நுழைவுத்தேர்வு நடத்திய பிறகு கல்வி அமைச்சர் மார்ச் 7ல் அவ்வாறு நுழைவுத் நடத்தப்பட மாட்டாது என்கிறார். இது தி.மு.க.,வின் பித்தலாட்டம்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லுாரிக்கு, 150 மாணவர்கள் சேர்க்கை நடந்து அவர்கள், ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் படிக்கின்றனர். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 1,900 கோடி ரூபாய் செலவில் அமைய உள்ளது.
ஏப்., 14ல் தி.மு. க., அமைச்சர்கள் எம்.எல்.ஏ.,க்களின் சொத்து பட்டியலை வெளியிட உள்ளோம். தி.மு.க., புள்ளிகள் 27 பேரின் சொத்து மட்டுமே, 2 லட்சத்து 24 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். தமிழகத்தின் மொத்த வருமானத்தில் பத்து சதவீதம் தி.மு.க.,வின் 27 பேரிடம் உள்ளது. அவர்களில் சிலர் அமைச்சர்கள்.
இவர்களில் ஒருவர் துபாயில் கம்பெனி நடத்துகிறார். ஒருவர் துறைமுகம் நடத்துகிறார். கர்நாடகாவில், நிறுவனம் முழுதும் ஒருவரின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஒருவர் ஆப்பிரிக்காவில் குடிநீர் ஆலை நடத்துகிறார்.
ஒருவர் லண்டனில் மனைவி பெயரில் மூன்று நிறுவனங்கள் பதிவு செய்துள்ளார். தமிழ்ப் புத்தாண்டு ஊழலுக்கு எதிரான திருவிழாவாக இருக்கும். காங்., தலைவர் அழகிரி உடன் மூன்று பேர் ரயிலை மறிக்க சென்றனர்.
மாணவர்களின் லேப்டாப் நிதியில் நினைவு சின்னம் வைக்க ஆரம்பித்த நாளிலேயே தி.மு.க., அழிய ஆரம்பித்து விட்டது. காமராஜரையே அவர் சுவிட்சர்லாந்தில் வீடு வாங்கியதாக அப்போது குற்றம் சாட்டியவர்கள் தி.மு.க.,வினர்.
இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!