ADVERTISEMENT
சென்னை, டி.என்.சி.ஏ., எனும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், 'டிவிஷன் கிரிக்கெட்' போட்டிகள், சென்னையில் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இதில், நான்காவது டிவிசன் 'ஏ' போட்டிகளில், மின் வாரிய விளையாட்டு கமிட்டி அணி மற்றும் சென்ட்ரல் யுனைடெட் கிளப் அணிகள் மோதின.
அதில், முதல் பேட் செய்த, மின் வாரிய அணி, 50 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு, 221 ரன் அடித்து குவித்தது. அணியின் வீரர் நவீன்ராஜ் 90, அழகுவேல் 56 ரன் எடுத்தனர்.
அடுத்து பேட் செய்த, சென்ட்ரல் யுனைடெட் கிளப் அணி, 48.3 ஓவர்களில் 'ஆல் அவுட்' ஆகி, போராடி 214 ரன் அடித்து தோல்விஅடைந்தது. மின் வாரிய வீரர் முத்துக் குமாரன், ஆறு விக்கெட் எடுத்து 55 ரன்களை கொடுத்தார்.
மற்றொரு போட்டியில், எஸ்.பி.ஐ., வங்கியின் கிளப் மற்றும் பெரம்பூர் யுனைடெட் கிளப் அணிகள் விளையாடின.
முதல் களமிறங்கிய, எஸ்.பி.ஐ., அணி, 30.2 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழந்து, 130 ரன்கள் அடித்தது. எதிர் அணி வீரர் ரமேஷ், ஐந்து விக்கெட் எடுத்து 41 ரன்களை கொடுத்தார்.
அடுத்து பேட்டிங் செய்த, பெரம்பூர் யுனைடெட் கிளப் அணி, 21.2 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி, 72 ரன்களில் ஆட்டமிழந்தது. எஸ்.பி.ஐ., வீரர்கள் பிரகாஷ் மற்றும் விஷ்ணு தலா இரண்டு விக்கெட் எடுத்து அசத்தினர்.
அடுத்த போட்டியில், மில்கிவே சி.சி., அணி, 50 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 405 ரன் எடுத்தது.
அணியின் வீரர் பாரதிராஜா, 89 பந்துகளில், 3 சிக்சர், 11 பவுண்டரி என, ஆட்டமிழக்காமல் 100 ரன் அடித்தார்.
அடுத்து பேட் செய்த, ஜார்ஜ் யுனைடெட் கிளப், 31.4 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழந்து, 139 ரன்களில் தோல்வியை கண்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!