இது தொடர்பாக ராகுல் தனது சமூக வலைதளத்தில், ‛இந்தியாவின் குரலுக்காக நான் போராடுகிறேன். அதற்காக என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்க தயாராக இருக்கிறேன்' எனப் பதிவிட்டுள்ளார்.
மோடி என்று முடியும் பேர் கொண்டவர்கள் எல்லாம் திருடர்களாக இருக்கின்றனர் என்று ராகுல் கர்நாடகாவில் பிரசாரத்தில் பேசுகையில் குறிப்பிட்டார். இதனை பா.ஜ., எம்எல்ஏ ஒருவர் சூரத் கோர்ட்டில் அவதூறு பரப்புவதாக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ராகுலுக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை நேற்று அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து லோக்சபா செயலர் உத்பால்குமார் சிங் ஒரு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளார். இதில் மக்கள் பிரதிநித்தவ சட்டப்படி ராகுல் எம்பி., பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.
எம்.பி.க்கள்/எம்.எல்.ஏ.க்கள் ஏதாவது ஒரு குற்றச்சாட்டில் 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 8(3)-ன்படி தீர்ப்பு வழங்கிய நாளில் இருந்து தகுதி நீக்கம் செய்ய முடியும். எனவே இந்த சட்ட விதிகளின்படி, ராகுல் எம்.பி. பொறுப்பை இழந்துள்ளார்.

தடை
தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் ராகுல் 8 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது. தண்டனை காலமான 2 ஆண்டுகள் மற்றும் அதற்கு பிறகு 6 ஆண்டுகள் ராகுல் போட்டியிட முடியாது.
இந்த நடவடிக்கைக்கு காங்., மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம்ரமேஷ் கூறியதாவது: ஜனநாயகத்தின் எதிரான குரலை நெரிக்கும் முயற்சிக்கு கண்டனம் தெரிவிக்கிறோம். நாங்கள் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம், அமைதியாக இருக்க மாட்டோம். என்றார்.
பிரியங்கா கண்டனம்
ராகுல் மீதான தகுதி நீக்க நடவடிக்கை ஒரு பழிவாங்கும் செயல் என்று குறிப்பிட்டுள்ளார்.
வாசகர் கருத்து (84)
இந்தியாவுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்றால்....முழு இத்தாலி மாஃபியா கும்பலும் நாட்டை விட்டு வெளியேறி விடுங்கள் .....நாட்டை பிடித்த பீடை ஒழிந்தது என்று...நாட்டு மக்கள் அனைவரும் நிம்மதியாக இருப்பார்கள் !!!!
இந்த ராகுல் என்கிற திருட்டு குடும்பம் இந்த குடும்ப கட்சி ஆட்சியில் கொள்ளையடித்து சேர்த்து வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டுள்ள சொத்துக்களை பறிமுதல் செய்து இந்த கூட்டத்திற்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும்
காங்கிரஸ்காரர்களுக்கு யோசிக்கும் திறனே இல்லாமல் போயிற்றே. சட்டம் தனது கடமையை செய்துள்ளது. இவர்கள் நீதியை எதிர்த்து போராடுகின்றார்களா இல்லை..எவனோ எழுதி கொடுத்ததை டிவிட்டரில் போட்டு லைக்குக்காக செய்கின்றார்களோ? இவர் இத்தாலி பிரஜையா இல்லை இந்திய குடியுரிமை உள்ளவரா? இந்தியாவுக்காக போராடுகின்றாராம். என்ன விலை கொடுக்கவும் தயாராமே..அதுக்குதான் தகுதி நீக்கம் செய்யப்பட்டீர்..உளறலில் உச்சம் தொட்டுவிட்டார். திருவாத்தான்ன்னு ஒரு கிராமத்து பேச்சு வழக்கில் இருக்குது..அதுக்கு பொருத்தமானவர் இவரே..
He is trying to say that he may even join with Pakistan for India
ஏதோ இத்தாலி இளவரசர் என்று நினைப்பு....வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசி கொண்டு திரிகிறார் ....எப்போது பாருங்கள் தீவிரவாதிகள் மற்றும் தேச விரோத சக்திகளுக்கு ஆதரவான பேச்சு ...