இஸ்ரேலில் சர்ச்சைக்குரிய சட்டம் நிறைவேற்றம்

மேற்காசிய நாடான இஸ்ரேலில் நீதித் துறையின் அதிகாரத்தை கட்டுப்படுத்தவும், நீதித்துறை அதிகாரத்திற்கும், அரசாங்கத்தின் அதிகாரத்திற்கும் இடையே சம நிலையை மீட்டெடுக்கவும், நீதித் துறையில் மாற்றம் கொண்டுவர இருப்பதாக அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார்.
'இது, ஜனநாயகத்துக்கு எதிரான செயல்' என குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களும், இஸ்ரேல் மக்களும் போராட்டத்தில் குதித்தனர்.
போராட்டம்
இஸ்ரேல் அரசின் முடிவை எதிர்த்து, 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கடந்த சில வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இது, அந்நாட்டில் வரலாறு காணாத வகையில் மிகப் பெரிய போராட்டமாக உருவெடுத்துள்ளது.
மக்கள் போராட்டத்துக்கு இடையே, நீதித் துறையில் மறுசீரமைப்பை உருவாக்கும் சர்ச்சைக்குரிய சட்டங்களில் முதல் சட்டம், அந்நாட்டு பார்லிமென்டில் நேற்று நிறைவேற்றப்பட்டது.
விமர்சகர்கள் கருத்து
'ஊழல் வழக்குகள், நீதித் துறையில் மறுசீரமைப்பு நடவடிக்கை ஆகியவற்றை காரணம் காட்டி, நெதன்யாகுவை ஆட்சி செய்ய தகுதியற்றவர் என நீதிமன்றம் பதவி நீக்கம் செய்ய முடியாதபடி, இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது' என, சட்ட விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.
வாசகர் கருத்து (12)
பார்லிமென்ட் இயற்றும் சட்டங்கள் அரசியலமைப்புச் சட்டத்தில் கூறியபடி உள்ளதா என்று தீர்ப்பளிப்பது மட்டுமே அந்தந்த நாட்டு சுப்ரீம் கோர்ட்டின் உரிமை. ஆனால் வரவர கோர்ட்டே🙃 சட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்த முயல்வதாக பலர் நினைக்கிறார்கள். தனது எல்லைக்குள் கோர்ட் செயல்படுவது அவர்களுக்கும் நாட்டுக்கும் நல்லது.
இதேபோன்று ஒரு சட்டத்தை தமிழகத்திலும் அந்த திருட்டு திமுக அரசு நிறைவேற்ற முயற்சி செய்தாலும் செய்யும். நீதிதுறையே, ஜாக்கிரதை...
நீதி துறை அதிகாரம், அரசு நிர்வாக அதிகாரம் சமநிலை தேவை. இஸ்ரேல் நல்ல நடவடிக்கை. எந்த போலீசும், வக்கிலுக்கு ஒருவர் (வயது) கல்வி, பணி பற்றி அறிந்து மனுவில் சேர்ப்பது இல்லை. (நீதிபதி மதிப்பிட உதவும்) பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சிக்கு பணிபுரியும் துறைக்கு தான் அதிக அதிகாரம் தேவை. வழக்கறிஞர்கள்/(நீதிபதிகள்) வழங்க பட்ட அதிகாரத்தை சட்டத்திற்கு வெளியே விசாரித்து compromise செய்து உரிமையாளரை ஏமாற்றி, தெருவில் விடுகின்றனர். தீர்ப்பின் அடித்தளம் வக்கீல் வாதம். நீதிமன்ற அதிகாரம் தேவை என்று பரப்பும் நபர்கள் ஒரு வழக்கு தொடுத்தால், குறைபாடுகளை அறிய முடியும். இந்தியா எப்போது நீதி துறையை சீர்திருத்தும்?
இங்கே கூட திருட்டு திராவிடர்கள் இப்படி செஞ்சானுவோ செஞ்சிகிட்டு இருகானுவோ...உதாரணம் துணை வேந்தர்கள் நியமன சட்டம்...
இந்தியாவும் சரி இஸ்ரேலும் சரி அவர்களின் அரசியில் நிலைப்பாட்டில் பெரிய மாற்றம் ஒன்றும் இல்லை சர்வாதிகாரம் தான் ஓங்கி உள்ளது