Load Image
Advertisement

மல்டி லெவல் பார்க்கிங் கடைகளுக்கு எப்ப தான் சாவி தருவீங்க... :மீனாட்சி கோயில் கடைக்காரர்கள் தவிப்பு

When will you give the keys to the multi-level parking shops... : Meenakshi temple shopkeepers are suffering   மல்டி லெவல் பார்க்கிங் கடைகளுக்கு எப்ப தான் சாவி தருவீங்க...  :மீனாட்சி கோயில் கடைக்காரர்கள் தவிப்பு
ADVERTISEMENT
மதுரை -மதுரையில் பழைய சென்ட்ரல் மார்க்கெட் இருந்த இடத்தில் உருவாகியுள்ள மல்டி லெவல் பார்க்கிங் பயன்பாட்டிற்கு வந்த நிலையில், அங்குள்ள கடைகள் இன்னும் பயன்பாட்டிற்கு வர மாநகராட்சி நடவடிக்கை எடுக்காததால் மீனாட்சி கோயில் கடைக்காரர்கள் தவிக்கின்றனர்.

மீனாட்சி அம்மன் கோயில் வீரவசந்தராய மண்டபம் 2018 பிப்.,2ல் தீப்பிடித்தது. கோயில் பாதுகாப்பு கருதி கோயிலுக்குள் அம்மன், சுவாமி சன்னதி பகுதியில் இருந்த 10 தேங்காய் கடைகள், 25 பூக்கடைகள் உட்பட 115 பேன்சி கடைகளை காலி செய்ய அறிவுறுத்தப்பட்டது. திருமலை நாயக்கர் மன்னர் காலத்தில் இருந்து பல தலைமுறைகளாக கடை நடத்தி வந்த உரிமையாளர்கள் தயங்கினர். அவர்களுக்கு பழைய சென்ட்ரல் மார்க்கெட்டில் உருவாகும் மல்டி லெவல் பார்க்கிங்கில் முன்னுரிமை அடிப்படையில் கடைகள் ஒதுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் உறுதியளித்தது.

இதற்கிடையே மல்டி லெவல் பார்க்கிங்கில் உள்ள 151 கடைகள் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் மாநகராட்சி சார்பில் ஏலம் விடப்பட்டது. அரசியல் தலையீட்டால் தேவையான, வசதியான கடைகள் புதியவர்களுக்கு ஒதுக்கப்பட்டது. இதைதொடர்ந்து முதல் தளத்தில் உள்ள 52 கடைகள் கோயில் கடை உரிமையாளர்களுக்கு ஒதுக்கப்பட்டது. ஒரு கடைக்கு டெபாசிட்டாக ரூ.6 லட்சம் செலுத்தினர். 'பார்க்கிங் பயன்பாட்டிற்கு வந்ததும் கடைச்சாவி தரப்படும்' என மாநகராட்சி உறுதியளித்து ஒன்றரை ஆண்டுகளாகி விட்டன. பார்க்கிங்கும் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. கடைகள் மட்டும் இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை.

மீனாட்சி கோயில் கடைக்காரர்கள் சங்கத் தலைவர் ராஜநாகுலு தரப்பில் கூறியதாவது: கடைகளுக்கு சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வந்துச்செல்ல போதிய பாதைகள் அமைக்கப்படவில்லை. பணிகள் ஆமை வேகத்தில் நடக்கின்றன. கடைகள் பயன்பாட்டிற்கு வராததால் எங்களுக்கு தொடர்ந்து வருவாய் பாதிக்கிறது. அதேபோல் வாடகையும் ரூ.30 ஆயிரம் வரை செலுத்த வேண்டியிருக்கும் என்கின்றனர். கடைகளை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதோடு, கடை வாடகையையும் குறைக்க மாநகராட்சி பரிசீலிக்க வேண்டும், என்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement