Load Image
Advertisement

திட்டமிடப்படாத தூர்வாருதல் பணியால் பக்தர்கள் அவதி: ராமேஸ்வரம் கோயில் நிர்வாகம் அலட்சியம்

Devotees suffer due to unplanned dredging work: Negligence of Rameswaram temple management   திட்டமிடப்படாத தூர்வாருதல் பணியால் பக்தர்கள் அவதி: ராமேஸ்வரம் கோயில் நிர்வாகம் அலட்சியம்
ADVERTISEMENT
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு, பின் கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் பயபக்தியுடன் நீராடி செல்வார்கள்.

அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் போல் தினமும் பல ஆயிரம் பக்தர்கள் நீராடினாலும் இந்த 22 தீர்த்தங்களும் வற்றாத ஜீவ நதியாக உள்ளது. இதனால் தான் 'புனித தீர்த்தம்' என பக்தர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், கடந்த 20 நாட்களுக்கும் மேலாக 7வது தீர்த்தமான சேதுமாதவர் தீர்த்த குளத்தை தூர்வார மின் மோட்டார் மூலம் 5 அடி உயரத்தில்கிடந்த தீர்த்தத்தை வெளியேற்றி அங்குஉள்ள சகதியை கோயில் ஊழியர்கள் அகற்றி வருகின்றனர்.

தூர்வாருவது குறித்து யாரிடமும் கலந்து ஆலோசிக்காமல், தன்னிச்சையாக கோயில் அதிகாரி எடுத்த முடிவால் பிற 21 தீர்த்த கிணற்றிலும்மளமளவென 2 அடி உயரத்திற்கு தீர்த்த நீர் மட்டம் குறைந்துள்ளது.

இதனால் கோடை காலமான ஏப்., மே, ஜூனில் பக்தர்கள் நீராட முடியாத அளவுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மே மாதம் இந்த குளத்தை தூர்வாரினர். அதுவும் தீர்த்தத்தை முற்றிலும் வெளியேற்றாமல், ஊழியர்கள் இறங்கி தீர்த்த நீருடன் சகதியை அள்ளினர். இதனால் பிற கிணற்றிலும் தீர்த்தம் குறையாமல் இருந்தது.

இதை எல்லாம் கருத்தில் கொள்ளாமல்துார்வாருதல் என்ற பெயரில் பிற தீர்த்தங்களுக்கும் வேட்டு வைத்த கோயில் அதிகாரியின் செயல், பக்தர்களிடம்கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வி.எச்.பி., மண்டல அமைப்பாளர் ஆ.சரவணன்கூறியது: 5 அடி உயரத்தில்இருந்து தீர்த்தத்தை முழுமையாக வெளியேற்றியதுடன் பிற தீர்த்தங்களிலும் தட்டுப்பாடு ஏற்படுத்தியது வேதனைக்குஉரியது.

இதனால் கோடையில் தீர்த்தங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு, பக்தர்கள் நீராட முடியாமல் போகும். இதுகுறித்து ஹிந்து அறநிலையத்துறை ஆணையர் விசாரித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம், என்றார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement