Load Image
Advertisement

என் கணவனை கொன்றவர்களை தூக்கில்போட வேண்டும்

Those who killed my husband should be hanged    என் கணவனை கொன்றவர்களை தூக்கில்போட வேண்டும்
ADVERTISEMENT


கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்த ஜெகன் என்ற வாலிபர் கடந்த, 21ல், அவரது மாமனார் சங்கர் மற்றும் சிலரால் குத்தி கொல்லப்பட்டார்.

இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இது குறித்து, ஜெகனின் மனைவி சரண்யா நிருபர்களிடம் கூறியதாவது:

எனக்கு திருமணமாகி இரு மாதங்கள் கூட நிறைவடையவில்லை; அதற்குள், இப்படி ஆகி விட்டது. நான் திருமணமாகி சென்ற நாள் முதல் என் வீட்டு ஞாபகம் வந்தால் தனிமையில் அழுவேன். அப்போது, என்னை சமாதானப்படுத்தி என்னுடன் சேர்ந்து என் கணவரும் அழுவார்.

என்னை ராணி மாதிரி பார்த்துக்கொண்டார். அப்படிப்பட்டவரை கொன்றுவிட்டார்களே; அதற்கு என்னை கொன்றிருக்கலாமே. ஜெகனை மறக்க சொல்லி என் தாய் எட்டி உதைத்த போதும், சித்ரவதை செய்த போதும் பொறுத்து கொண்டு திருமணம் செய்தேன்.

என் வாழ்க்கையை கெடுத்து விட்டார்கள். இதில், சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் தூக்கில் போட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து (15)

  • Barathan - chennai,ஆப்கானிஸ்தான்

    இந்த கமெண்ட்ஸ் எல்லாம் படிக்கும் போது தான் தெரிகிறது மக்கள் எவ்ளோ வன்மமாக சிந்திக்கிறார்கள் என்று

  • vns - Delhi,யூ.எஸ்.ஏ

    No sympathy for someone who betrays the parents

  • R S BALA - CHENNAI,இந்தியா

    மீடியாவிலும்,மேடையிலும் புரட்சி பேசலாம்.. ஆனால் நடைமுறையில் இதுபோல சம்பவங்கள் ஓயப்போவதில்லை..

  • SOLAIRAJA - CHENNAI,இந்தியா

    இப்போது இந்த பெண்ணை யாரும் பழிக்க வேண்டாம்.... அது முற்றிலும் தவறு..... பெண் இன்னொருவனை விரும்பி திருமணம் செய்து கொண்டு விட்டால்...... அதை ஏற்க மனம் இல்லை என்றால் குடும்பத்தை விட்டு ஒதுக்கி வை.... உன் சொத்து எதையும் கொடுக்காதே..... அவர்களை நிம்மதியா வாழ விடு........ அதை விட்டு விட்டு மருமகனை கொன்று இப்போது நீ ஜெயிலில் இருக்கிறாய்..... இனி உன் வாழ்நாள் முழுவதும் உனக்கு கொலை பழியுடன் நரக வேதனை தான்......உனக்கு இது தேவையா.......சமூகத்தில் உன்னை இனி யாரும் மதிக்க போவதில்லை.... வாழ் நாள் முழுவதும் கொலைகாரன் அதுவும் தன் சொந்த மகளின் கணவனையே கொன்ற கொலையாளி என்ற பழிச்சொல்லுடன் வாழ வேண்டியது தான். குற்ற செயலில் ஈடுபடும் முன் அதன் பாதகங்களை நினைத்து பார்க்க வேண்டும். நன்றி

  • Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா

    வளர்த்த பெற்றோர்களை மதிக்காத பெண்களுக்கு சரியான பரிசு. தூக்கில் போட்டாலும் மகளுக்கு தண்டணை கொடுத்த அப்பா வாழ்க

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement