Load Image
Advertisement

நவீன் பட்நாயக்கை சந்தித்தார் மம்தா : 2024 தேர்தல் கூட்டணிக்கு ஆயத்தம்?

Mamata meets Naveen Patnaik: Ready for 2024 election alliance?   நவீன் பட்நாயக்கை சந்தித்தார் மம்தா :  2024  தேர்தல் கூட்டணிக்கு  ஆயத்தம்?
ADVERTISEMENT
புவனேஸ்வரம்: ஒடிசா சென்றிருந்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்தார்.

2024 லோக்சபா தேர்தலை எதிர்நோக்கி மாநில கட்சி தலைவர்கள் , பா.ஜ., காங்., அல்லாத வலுவான கூட்டணி அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

கடந்த வாரம் டில்லி ஆம் ஆத்மி கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், பா.ஜ., காங்., அல்லாத மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாகவும் தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு மாநில கட்சி முதல்வர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.
Latest Tamil News

இந்நிலையில் ஒடிசா சென்றிருந்த திரிணாமுல் காங். தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, அம்மாநில பிஜூ ஜனதா தள கட்சி தலைவரும், முதல்வருமான நவீன்பட்நாயக்கை சந்தித்தார்.மரியாதை நிமித்தமான சந்திப்பு என கூறப்பட்டாலும், இருவரும் தேசிய அரசியல் குறித்து பேசியதாகவும், லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து விவாதித்ததாகவும் பிஜூ ஜனதா தள கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


வாசகர் கருத்து (10)

  • Duruvesan - Dharmapuri,இந்தியா

    Appusamy, நீங்க பெந்த கொஸ்தே vaa?

  • N SASIKUMAR YADHAV -

    பட்நாயக்கிடம் மம்முதாவின் பருப்பு வேகாது மம்முதா மாதிரி பிரிவினை பேசாமல் தேசியம் பக்கம் நிற்பவர் பட்நாயக் அவர்கள்

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    கூட்டணி ஆரம்பிப்பதற்கு முன்பே 'எனக்குத்தான் அந்த பிரதமர் பதவி' என்று பல கூட்டணி கட்சி தலைவர்கள் கணக்கு போட ஆரம்பித்துவிட்டார்கள். கனவு காண ஆரம்பித்துவிட்டார்கள். குறிப்பாக மம்தாவுக்கு அந்த கனவு ரொம்ப நாட்களாக உள்ளது. அதுபோல் தமிழத்தில் ஸ்டாலின் ஐயா அவர்களுக்கு. தெலுங்கானாவில் அந்த KCR -ருக்கு

  • sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா

    சந்திரபாபு நாயுடுவை பின் பற்றினால் அரசியல் கோவிந்தா கோவிந்து.

  • Duruvesan - Dharmapuri,இந்தியா

    விடியல் சாரை யாரும் சீந்த மாட்டிங்களா 😭? அதான் ஹிந்தி வேணும் வாடானு சொல்லிட்டார் இல்ல,வேணும்னா ஹிந்தி ஆட்சி மொழின்ன சொன்னா போதுமா 🥹?சரி கனி அக்கா பால் குடம் எடுத்துனு உடைய அண்ணன் காவடி எடுத்துனு பழனிக்கு போவாங்க ஓகே vaa, விடியல் சார் கண்டி பிரதமர் ஆனா போதும்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்