Load Image
Advertisement

தமிழக காங்., எம்எல்ஏ.,க்கள் போராட்டம்



சென்னை: பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதற்கு சூரத் கோர்ட் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது. இதனைக் கண்டித்து தமிழக சட்டசபை வளாகத்தில் காங்., எம்எல்ஏக்கள் போராட்டம் நடத்தினர்.
Latest Tamil News


கும்பகோணத்தில் காங்., தலைவர் அழகிரி தலைமையில் சிலர் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர்.

நீதியின் பெயரால் இந்த தண்டனையா ?



போராட்டத்தின் போது அழகிரி கூறியதாவது: இந்திய ஜனநாயகத்தில் குற்றம் செய்தவர்கள் மோடி என்று பெயரோடு முடிவதாக சொல்லியிருப்பதில் எவ்வித தவறும் இல்லை. பா.ஜ., வின் சார்பில் ஜனநாயக படுகொலை நடந்திருக்கிறது.
நீதியின் பெயரால் இந்த தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்காதீர்கள் என எங்கள் தரப்பில் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். சட்ட ரீதியாக எதிர்கொள்வோம். சட்ட வழியில் போராடி வெற்றி பெறுவோம் என்றார்.
Latest Tamil News
தலைமை செயலகம் அருகே காங்., எம்எல்ஏ செல்வப்பெருந்தகை மற்றும் பலர் கறுப்பு ரிப்பன் அணிந்து கோஷங்கள் எழுப்பினர்.
இது போல் சென்னை ராயப்பேட்டையில் உள்ள காங்., தலைமை அலுவலகம் முன்பு கூடிய காங்., தொண்டர்கள் ஆர்பாட்டம் நடத்தினர்.



வாசகர் கருத்து (32)

  • ramani - dharmaapuri,இந்தியா

    அழுகிரி ஏன் உங்கள் எஜமான் திமுககாரங்க கேட்டிருந்தால் நூறு பேராவது அனுப்பி இருப்பாங்களா. நாலு பேருக்கு நன்றி இந்த நாலு பேருக்கு நன்றி மாதிரி வந்துட்டே. போக்குவரத்து ஸ்தம்பிச்சிருக்குமே

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    பொதுமக்களுக்கு இடையூறு செய்வதற்கென்றே ஒரு கட்சி இந்தியாவில். கேவலம். மஹாகேவலம்.

  • rama adhavan - chennai,இந்தியா

    நீதிமன்றம் தானே தீர்ப்பு வழங்கியது. அதை எதிர்த்து தானே போராடவேண்டும். இதில் மதிய அரசு என்ன செய்தது? போலிகளின் வெளி வேஷம்.

  • M Ramachandran - Chennai,இந்தியா

    ஆளுகும் கிரி பெரியா கூட்டம் இதில் ஊடகம் நிங்கள்சி வேறு. இந்த நொந்த கிரி பதவியய் காப்பாற்றி கொள்ள போடும் பகல் (வெளி) வேக்ஷம்.

  • HoneyBee - Chittoir,இந்தியா

    நாலு பேருக்கு நன்றி... காங்கிரஸ்–க்கு சங்கு

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement