Load Image
Advertisement

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் நிறைவேற்றம்

சென்னை: கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பிய, 'ஆன்லைன்' சூதாட்ட தடை சட்ட மசோதா, இன்று (மார்ச் 23) சட்டசபையில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டு, விவாதத்திற்கு பின் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
Latest Tamil News


ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய, அவசர சட்டம் இயற்ற, தமிழக அமைச்சரவை கடந்த ஆண்டு செப்., 26ல் ஒப்புதல் அளித்தது. அக்., 1ல், அவசர சட்டத்துக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்தார். தமிழக சட்டசபையில், அக்., 19ல், ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

கவர்னர் ஒப்புதலுக்காக, அக்., 28ல் அனுப்பப்பட்டது; கவர்னர் ஒப்புதல் தரவில்லை. தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய, ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை இயற்ற, தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை எனக் கூறி, சட்ட மசோதாவை அரசுக்கு கவர்னர் திருப்பி அனுப்பினார்.

Latest Tamil News

அதைத் தொடர்ந்து, ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை, மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றி, கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்ப, தமிழக அமைச்சரவை முடிவு செய்தது. அதன்படி, சட்டசபையில் இன்று 'ஆன்லைன்' சூதாட்ட தடை சட்ட மசோதா,வை முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்தார்.


பின்னர் முதல்வர் ஸ்டாலின், சட்டசபையில் பேசியதாவது:



ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் கடமை அரசுக்கு உள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணத்தை இழந்து, 41 பேர் இதுவரை தற்கொலை செய்துள்ளனர். கனத்த இதயத்துடன் சட்டசபையில் நிற்கிறேன். ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என மின்னஞ்சலில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கோரிக்கை விடுத்தனர். ஆன்லைன் சூதாட்ட தடைக்கு எதிராக 25 பேர் மட்டுமே கருத்து கூறியுள்ளனர்.

ஆன்லைன் சூதாட்டம் குறித்து ஆசிரியர்கள், மாணவர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்ட பின்னரே தடை மசோதா கொண்டு வரப்பட்டது. ஆன்லைன் சூதாட்டத்தை தடுப்பது குறித்து ஆலோசனை வழங்க ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்தோம். ஆன்லைன் தடை மசோதாவை 131 நாட்களுக்குப் பின் கவர்னர் திருப்பி அனுப்பினார். தடை மசோதா குறித்து கவர்னர் ரவி கேட்ட விளக்கம், 24 மணி நேரத்தில் அனுப்பி வைக்கப்பட்டது.

ஆன்லைன் ரம்மி தொடர்பாக 2.4 லட்சம் ஆசிரியர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. மாணவர்களின் படைப்பாற்றல் பாதிப்பதாக 74% ஆசிரியர்கள் கருத்து கூறியிருந்தனர். ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு சட்டசபையில் அனைத்து எம்எல்ஏக்களும் ஆதரவளிக்க வேண்டும். மக்களை காப்பதே சட்டத்தின் கடமை. மனசாட்சியை உறங்கச் செய்துவிட்டு, எங்களால் ஆட்சியை நடத்த முடியாது.

ஆன்லைன் ரம்மி தடை மசோதவை ஒருமனதாக நிறைவேற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். மனசாட்சியை உறங்கச் செய்து விட்டு, எங்களால் ஆட்சியை நடத்த முடியாது. ஆன்லைன் சூதாட்டத்தை இனி ஒரு உயிரும் பறிக்கப்படாமல், ஒரு குடும்பமும் நடுத்தெருவில் நிற்கக் கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

மசோதா மீது பாமக.,வின் ஜிகே மணி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், அதிமுக சார்பில் தளவாய் சுந்தரம், பா.ஜ.,வின் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பேசினர். இதனை தொடர்ந்து மசோதா ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.




ஓபிஎஸ் ஆதரவு; இபிஎஸ் எதிர்ப்பு

ஆன்லைன் ரம்மி தடை மசோதா மீது முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பேசும் போது, இந்த மசோதாவிற்கு அதிமுக முழு ஆதரவு அளிக்கும். விவாதமின்றி இந்த மசோதாவை விவாதமின்றி நிறைவேற்றி இருக்கலாம் என்றார். இதற்கு பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். பழனிசாமி தரப்பில், தளவாய்சுந்தரம் பேசியிருந்தார்.
அப்போது பழனிசாமி பேசுகையில், கட்சியில் ஒருவருக்கு என சொல்லிவிட்டு, வேறொருவரை ஏன் பேச அனுமதித்தீர்கள் என கேள்வி எழுப்பினார்.
சபாநாயகர் அப்பாவு கூறுகையில், முக்கியமான மசோதா என்பதால் முன்னாள் முதல்வர் என்ற முறையில் வாய்ப்பு வழங்கப்பட்டது. வேறு நோக்கம் கற்பிக்க வேண்டாம் என்றார்.



வாசகர் கருத்து (15)

  • DHIVAKAR M - Chennai ,இந்தியா

    40 கோடி மக்கள் மதுபான கடைகளால் பாதிப்பட்டு வருகின்றனர் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் 41 பேருக்காக அரசு வாதாடி கொண்டிருக்கிறது முதலில் மதுக்கடைகளை மூடும் பணியை மேற்கொள்ளவும்

  • சிந்தனை -

    நல்ல மனசு. டாஸ்மாக்கினால் இதுவரை பல லக்ஷம் பேர் செத்துட்டாங்க. அப்டியே....

  • Sridhar - Chennai,இந்தியா

    தடை சட்டம் வந்தபின் ஆன்லைன் ரம்மி விளையாடினவர் தற்கொலை செய்து கொண்டால் யார் பொறுப்பு ஏற்க வேண்டும்?

  • theruvasagan -

    ஆன்லைன் ரம்மி விளையாட்டால் 41 பேர் மரணம். இதை தடை செய்யாமல் மனசாட்சியை உறங்க வைத்து விட்டு ஆட்சி செய்ய முடியாது. ஆனால் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கி இளம் விதவைகளை உருவாக்கி பல குடும்பங்களை நடுத்தெருவில் தள்ளும் டாஸ்மாக்கால் எங்கள் தூக்கத்துக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. சொல்லப் போனால் முப்பதாயிரம் கோடி வருமானம் வருகிறது என்ற களிப்பில் மனசாட்சியை தாலாட்டு பாடி தட்டி தூங்க வைத்துவிட்டு எந்த மன உறுத்தலும் இல்லாமல் சாராய சாம்ராஜ்ஜியத்தை ஜாம் ஜாம்னு நடத்துவோம்.

  • N SASIKUMAR YADHAV -

    ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைப்போடும் திமுக அரசு தினமும் தீயமுகவினரால் நடத்தப்படும் சாராய ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் சாராயத்தை அரசு கொள்முதல் செய்து அப்பாவி ஏழைமக்களுக்கு விற்பனை செய்து அதனால் ஏகப்பட்ட பாதிப்புகள் இருப்பது தெரிந்தும் தடைப்போடாமல் இருப்பது மகா கேவலம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்