Load Image
Advertisement

ஆற்றல் தரும் அலோகக் கட்டி!

A metal block that gives energy!   ஆற்றல் தரும் அலோகக் கட்டி!
ADVERTISEMENT
சூரிய மின்சாரத்தை பகலில் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும். காற்றாலை மின்சாரத்தை காற்று வீசும் காலத்தில்தான் தயாரிக்கலாம். இவற்றை பிற சமயங்களில் பயன்படுத்த, ஆற்றலை சேமிப்பதுதான் ஒரே வழி.

அந்த தத்துவத்தின் அடிப்படையில் ஆற்றலை வெப்பமாக மாற்றி, சேமித்து வைத்து, பின்னர், வேண்டும்போது மின்சாரமாகவோ, நிராவி ஆற்றலாகவோ மாற்றிக்கொள்ளலாம் என்கிறனர் ஆஸ்திரேலியாவிலுள்ள 'எம்,ஜி.ஏ., தெர்மல்' நிறுவனத்தின் விஞ்ஞானிகள்.

ஆற்றலை வெப்பமாக மாற்றி, எம்.ஜி.ஏ., என்ற வகை அலோகத்தால் ஆன கட்டிகளில் சேமிக்க முடியும் என்று சோதனைகளின் மூலம் எம்ஜி.ஏ., தெர்மல் விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். சிலவகை அலோகத் துகள்களின் கலவையால் உருவாக்கப்பட்ட அலோகக் கட்டியில் அதிக வெப்பம் சேரும்போது, சில அலோகத் துகள்கள் உருகி, திரவமாகி கொதிநிலைக்கு அருகே வருகின்றன. ஆனால், உருகாத அலோகத் துகள்கள் அந்தக் கட்டியை கெட்டியான நிலையிலேயே வைத்திருக்கின்றன.

வெப்பத்தை கட்டியிலிருந்து எடுத்து, ஆற்றலாக மாற்றி பயன்படுத்தலாம். அப்போது கட்டி குளிர்ந்து, திரவமான அலோகம் மீண்டும் திடமாக மாறிவிடும். இதை வீடுகளுக்கும், சிறிய தொழிற்சாலைகளுக்கும் பயன்படுத்த முடியுமா என ஆராய்ச்சிகள் நடக்கின்றன.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement