கொல்லங்கோடு அருகே பாத்திமாநகரை சேர்ந்தவர் பெனடிக் ஆன்றோ பாலியல் தொந்தரவு செய்ததாக பெங்களூருவில் படிக்கும் குமரி மாவட்ட நர்சிங் மாணவி கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அவரை தாக்கி சில இளைஞர்கள் லேப்டாப்பை பறித்து சென்ற சில நாட்களில் பாதிரியாரின் ஆபாச படங்கள் வைரலானது. குறிப்பாக சென்னையில் படிக்கும் போது காதலித்த பெண்ணுடன் நெருக்கமாகவும், ஆடைகள் இல்லாமலும் இருக்கும் படங்கள் வெளியானது. அந்த பெண்ணுக்கும் பாதிரியார் திருமணம் செய்து வைத்ததும் தெரிந்தது. திருமணத்துக்கு பிறகும் இருவரும் தொடர்பில் இருந்து வந்துள்ளனர்.
தொடர்ந்து பாதிரியாருக்கு எதிராக புகார்கள் வருகின்றன. பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக புகார் செய்யலாம். அவர்களது விபரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என போலீசார் அறிவித்தனர். இதுவரை 4 பெண்கள் புகார் செய்துள்ளனர்.

இதற்கிடையில் ஒரு கான்ட்ராக்டரின் மனைவி, மகள், மருமகள் என மூவரிடம் ஒரே நேரத்தில் பழகி ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் பாதிரியார் வாட்ஸ் ஆப் மூலம் சாட்டிங் செய்து வந்துள்ளார். இவர்கள் உட்பட பாதிரியாரிடம் தொடர்பில் இருந்த பெண்கள் தற்போது அதிர்ச்சியில் உள்ளனர். பாதிரியாரிடம் இருந்து கைப்பற்றிய ஆவணங்களின் அடிப்படையில் தங்களிடம் விசாரணை நடத்த போலீஸ் வந்து விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.
நாகர்கோவில் சிறையில் உள்ள பாதிரியார் தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக வேறு சிறைக்கு மாற்ற பாதிரியார் கோரியுள்ளார். வேறு சிறைக்கு அவரை மாற்றுவது குறித்து போலீசார் ஆலோசித்து வருகின்றனர். பாதிரியாரிடமிருந்த 11 சிம்கார்டுகள் யார் பெயரில் பெறப்பட்டது எனவும் விசாரிக்கின்றனர்.
எஸ்.பி., ஹரிகிரண்பிரசாத் கூறியதாவது: இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை விரைவாக இரு வாரங்களுக்குள் தாக்கல் செய்யப்படும். ஆபாச படங்களை வெளியிட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
வாசகர் கருத்து (63)
கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமல்ல, இந்தியா முழுக்க ஏன் உலகம் முழுக்க பாதிரியார் கன்னியாஸ்திரில்லாம் அப்படி இப்படித்தான் இருப்பாய்ங்க. சர்ச்சுக்குள் க்ரூப் செக்ஸ், ஹோமோ செக்ஸ், மைனர் செக்ஸ், மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்வது, விபச்சாரம் வியபச்சார தரகு என்று எவ்வளவோ மேட்டர் அவ்வப்போது பல்வேறு நாடுகளில் வெளிவந்து கொண்டுதான் இருக்கிறது இத்த போயி பெரிய மேட்டரா பேசிகிட்டு. எங்காவது ஒன்றிரெண்டு பாதிரியார் உத்தமராக இருப்பாரான்னு தேடி பாருங்க. அவரை பிடித்து விருது கொடுத்து கவுரவப்படுத்துங்க சார்.
சாமியார் , பாதிரியார், இவர்களை, ஒரு அறுபது வயதிற்கு மேல் நியமித்தால், இவ்வாறு தவறுகள் நடப்பது குறையும்...
"வாட்ஸாப் என்பது ஒருவர் மற்றவரிடம் பேசுவதற்குத்தானே. அப்படி இருக்கும்போது இவர் அதை முழுமையாக பயன்படுத்தியுள்ளார் இதில் தவறென்ன உள்ளது. தேவையென்றால் பாவ மன்னிப்பு கொடுத்திடலாம்". கோவையில் குண்டு வெடித்தபோது காஸ் சிலிண்டர் என்று கூறியவர்களுக்கு, இதுபோன்று சொல்ல எவ்வளவு நேரம் ஆகும்.
போப்பின் அனுமதி வாங்கியதா போலீஸ் என்று திண்டுக்கல்லிருந்து கூவுவார்கள்.
நம் வீட்டருகில் புதியவன் குடிவரும்போது கவனம் தேவை. பாட்டம் விட்டது பேரனுக்கு தண்டனை. நாம் விடுவது வருங்காலம் தமிழ் இனமே இல்லாமல் செய்ய வேலை நடக்கிறது புரிந்தால் நல்லது. மனைவி இருப்பார்கள் குழந்தை வேற இருக்கும்