ADVERTISEMENT
மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடுகள், நிறுவனங்கள், கடைகள் 6 மாதங்களுக்கு ஒரு முறை சொத்து, பாதாள சாக்கடை, குடிநீர், காலி மனை வரிகளை செலுத்த வேண்டும்.
இதில் பலர் இப்போ, அப்போ என இழு, இழு என இழுத்தடித்து பல லட்சம் ரூபாய் வரை செலுத்தாமல் உள்ளனர். இதனால் மாநகராட்சிக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டது. வார்டுகளுக்கு போதிய நிதியை ஒதுக்கி அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முடியாமல் தவிக்கிறது. கவுன்சிலர்களும் தொடர்ந்து நிதி கேட்டு குரல் கொடுத்து வருகின்றனர்.
அரசியல் தலையீடு, பெரிய நிறுவனங்கள் என பாரபட்சம் பார்க்காமல் வரி வசூலிக்க வேண்டும்என தினமலர் நாளிதழ் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகிறது. வரி செலுத்தாத முதல் 20 பேரின் பெயர் பட்டியலை மாநகராட்சி இணையத்தில் வெளியிட வேண்டும், பொது இடங்களில் பேனராக வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியது.
இதன் எதிரொலியாக வரி வசூலிக்க தனி குழுவை மாநகராட்சி களமிறக்கி உள்ளது. அந்த குழு வரி செலுத்தாத கடைகள், நிறுவனங்கள், வணிக கட்டடங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி வருகிறது.
கொடுத்த கெடுவிற்குள்செலுத்தாவிட்டால் பூட்டு, குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு 'கட்' என தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
மதுரை எல்லீஸ்நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை ரூ.30 லட்சம் வரிபாக்கி செலுத்தவில்லை. மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியும், நேரில் எச்சரித்தும் கண்டுகொள்ளவில்லை. இதனால் நேற்று வரி வசூல் குழு அந்த மருத்துவமனைக்கு பூட்டு போட்டது. அதற்கு மருத்துவமனை ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து மறியலுக்கு முயன்றனர். எஸ்.எஸ்.காலனி போலீசார் சமரசம் செய்தனர்.
மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
கொரோனா ஊரடங்கு, வரி வசூல் மென் பொருள் அப்டேட் காரணமாக வரி வசூல் தாமதமானது. தற்போது வேகமாக வசூலாகி வருகிறது. 70 சதவீதம் வரை வரி வந்து விட்டது.
தனியார் மருத்துவமனை ரூ.30 லட்சத்தில் ரூ.10 லட்சம் செலுத்தி விட்டனர். மீதமுள்ள தொகையை செலுத்த கேட்ட நிலையில் பிரச்னை செய்துவிட்டனர்.இது போன்றவர்களிடம்வரி வசூலிக்க தனி குழு உருவாக்கப்பட்டது, என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!