Load Image
Advertisement

அரசு நடுநிலைப்பள்ளி கட்டடப்பணிகள் தாமதம்: மாணவர்கள் தரையில் அமர்ந்து படிக்கும் அவலம்

Govt middle school construction delayed: Students sit on the floor to study   அரசு நடுநிலைப்பள்ளி கட்டடப்பணிகள் தாமதம்: மாணவர்கள்  தரையில் அமர்ந்து படிக்கும் அவலம்
ADVERTISEMENT
மானாமதுரை, மார்ச் 23- மானாமதுரை பர்மா காலனி அரசு நடுநிலைப்பள்ளிகட்டடப் பணிகளை விரைந்து முடிக்க பெற்றோர்கள்வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

மானாமதுரை பர்மா காலனியில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப்பள்ளியில் 280க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் உள்ள வகுப்பறை கட்டடங்கள் மிகவும் சேதமடைந்ததை தொடர்ந்து அக்கட்டடத்தை இடித்து விட்டு புதிதாக வகுப்பறை கட்ட வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.

கடந்த வருடம் சேதமடைந்த வகுப்பறைகளை இடித்துவிட்டு புதிதாக வகுப்பறை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் பள்ளி மாணவர்கள் வகுப்பறைகள் இல்லாமல் பள்ளி வளாகத்தில் தரையில் அமர்ந்து படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பெற்றோர்கள் கூறுகையில், அரசுநடுநிலைப் பள்ளியில் நடைபெற்றுவரும் கட்டடபணிகள் தாமதமாவதால் மாணவர்கள் வெளியில் உட்கார்ந்து பாடம் படிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்பட்டு வருகிறது.

அதிகாரிகள் உடனடியாக கட்டடப் பணிகளை விரைவுபடுத்தி புதிய வகுப்பறைகளை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement