Load Image
Advertisement

ரூ.93 லட்சத்தில் அமைக்கப்பட்ட நவீன மீன் அங்காடி வீணாகி போச்சே...

A modern fish shop set up at a cost of Rs.93 lakhs will go to waste...   ரூ.93 லட்சத்தில் அமைக்கப்பட்ட நவீன மீன் அங்காடி வீணாகி போச்சே...
ADVERTISEMENT
ராமநாதபுரம்-ராமநாதபுரம் உழவர் சந்தை அருகே ரூ.93 லட்சத்தில் நவீன மீன் அங்காடி மையம் அமைக்கப்பட்டது. 2022 ல் அ.தி.மு.க., ஆட்சியில் திறப்பு விழா நடந்த பின் சில நாட்களில் மூடப்பட்டு தற்போது வரை பூட்டியே கிடப்பதால் பராமரிப்பின்றி கட்டட சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து, செடி,கொடிகள் வளர்ந்துள்ளது. குளிர் சாதன பெட்டிகள் பழுதாகி அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளதாக மக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரை, ஏர்வாடி, ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன், வாலிநோக்கம், முந்தல், தொண்டி, உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து மீன்கள் ராமநாதபுரம் மீன் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வருகிறது. ராமநாதபுரத்தில் சாலைத்தெரு, பாரதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மீன் மார்க்கெட் செயல்படுகிறது.

சாலைத்தெரு மீன் மார்க்கெட் அருகில் காய்கறி மார்க்கெட் செயல்படுவதால் மக்கள் குவிவதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்நிலையில், புதிய பஸ்ஸ்டாண்ட் பின்புறம் உழவர் சந்தை அருகே நவீன முறையில் ரூ.93 லட்சத்தில் புதிய மீன் மார்க்கெட் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு 54 கடைகள், வாகனங்கள் நிறுத்துமிடம், குடிநீர் வசதி, மீன்களை பாதுகாக்க குளிர்சாதன அறை, குறைந்த வாடகை என நவீன முறையில் இந்த மீன் மார்க்கெட் அமைக்கப்பட்டுள்ளது. இதனை 2022 ல் அ.தி.மு.க., ஆட்சியில் திறக்கப்பட்டு சில நாட்கள் செயல்பட்டது.

அப்போது இங்கு எதிர்பார்த்த அளவிற்கு வியாபாரிகள் வராததால் ஒப்பந்ததாரர் நஷ்டம் ஏற்படுவதாக கூறியதால் அதன் பின் பூட்டியே கிடக்கிறது. தற்போது ஓராண்டாக்கும் மேலாக பயன்பாடு இல்லாமல் நவீன மீன் அங்காடி பகுதியில் புதர் மண்டியுள்ளது.

ஒப்பந்த காலம் முடிந்த பிறகு தான் மறு ஏலம் விட உள்ளதாக நகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர். எது எப்படியோ பல லட்சத்தில் கட்டிய நவீன மீன் அங்காடி குளிர்சாதன அறை, ஐஸ் பெட்டிகள் பழுதாகி அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது.

எனவே நடப்பு நிதியாண்டிலாவது நவீன மீன் அங்காடியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள், வியாபாரிகள் வலியுறுத்தினர்.---


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement