Load Image
Advertisement

பத்மவிருதுகளை வழங்கினார் ஜனாதிபதி

The President presented the Padma Awards for the year 2023    பத்மவிருதுகளை வழங்கினார் ஜனாதிபதி
ADVERTISEMENT
புதுடில்லி : 2023-ம் ஆண்டு பத்ம விருதுகளுக்கு தேர்வு பெற்றவர்களுக்கு இன்று ராஷ்ட்ரபதி மாளிகையில் நடந்த விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கினார்.


கலை, சமூக சேவை, பொது சேவை, அறிவியல் - தொழில்நுட்பம் உட்பட பல்வேறு துறைகளில் சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு ஆண்டு தோறும் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்தாண்டு பத்ம விருதுக்கு தேர்வு பெற்ற 106 பேரின் பெயர்கள் கடந்த ஜன.25 மத்திய அரசு வெளியிடப்பட்டது.

Latest Tamil News
அதன்படி தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த இருளர் இன பாம்புபிடி வீரர்கள் வடிவேல் கோபால், ம.சி. சடையன், மற்றும் சினிமா பாடகி வாணி ஜெயராம் உள்பட 106 பேர் பத்ம விருதுக்கு தேர்வு பெற்றனர். இவர்களுக்கு இன்று டில்லி ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கி கவுரவித்தார். பாடகி வாணி ஜெயராம் பத்ம விருது பெறுவதற்கு முன்னதாகவே மரணம் அடைந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


வாசகர் கருத்து (1)

  • Fastrack - Redmond,இந்தியா

    கலைஞருக்கு கொடுக்க வாய்ப்பு உண்டா

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்