காஞ்சிபுரம் அடுத்த குருவிமலையில் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு சிறிய ரக மற்றும் வாண வேடிக்கைகள் உள்ளிட்டவை தயாரிக்கப்படுகிறது. நண்பகல் 12 மணயளவில் குடோனுக்கு வெளியே காய வைக்கப்பட்டிருந்த பட்டாசின் மூலப்பொருட்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

தகவல் அறிந்து, 2 தீயணைப்பு வாகனத்துடன் வந்த காஞ்சிபுரம் தீயணைப்பு துறை வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து, மீட்பு பணியில் ஈடுபட்டனர். அங்கு படுகாயமடைந்த 7 பெண்கள் உள்ளிட்ட பலர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 8 பேர் உயிரிழந்தனர். 14 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி., உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பட்டாசு கடை உரிமையாளர் நரேந்திரனை போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து (5)
கொடுமையான சம்பவம். எப்ப தூங்கி எழுந்த நாலு அதிகாரிகள் வருவாங்க பாருங்க "சட்டத்திற்கு புறம்பாக, லைசன்சு இல்லாமல் இயங்கிய.... " "எந்த பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் இயங்கியதே காரணம்"...... என்பர். அதை ஏன் இவ்வளவு நாள் வெட்டி சம்பளம் வாங்கியும் சோதனை செய்து பிடிக்க வில்லை என்று யாரும் கேள்வி கேட்ட்க மாட்டடோம். எந்த கூத்து நடக்கும் போதே, அரசு, மக்கள் வரிப்பணத்தில் இழப்பீடு ஒன்று அறிவிக்கும், பிறகு அனைவரும் அடங்கி அடுத்த பிரச்சனைக்கு போய் விடுவோம். எத்தனை வருசமா பார்த்துக்கொண்டு இருக்கோம்.....கொடுமையடா சாமி
உண்மையாவே பட்டாசு வெடித்துதான் இப்படி ஆனதா இல்ல மூர்க்கம் வேலையா? ஏன்னா போலீஸ் பொய்யா புளுகுமே
பட்டாசுக்கு கிடங்கு .... கிடங்கில் இருந்து எங்கே அனுப்ப வைத்து இருந்தார்கள்? இங்கேயே வெடித்து விட்டது.இறைவா அதிக சேதாரம் இல்லாமல் இருக்கட்டும்.
எந்த பாதுகாப்பு நடைமுறைகளையும் பின்பற்றுவதில்லை
ஆளுக்கு 5, 10 லட்சம் குடுத்துரலாம். அரசுக்கு கடன் வராமல் என்ன வரும்? பட்ஜெட் போட மட்டும் ...