Load Image
Advertisement

திமிரு எடுத்தவர்கள் எல்லாம் திமுக.,வில்: எச்.ராஜா தாக்கு

All those who are arrogant in DMK says H. Raja  திமிரு எடுத்தவர்கள் எல்லாம் திமுக.,வில்: எச்.ராஜா தாக்கு
ADVERTISEMENT

தூத்துக்குடி: ‛திமிரு எடுத்தவர்கள் எல்லாம் திமுக.,வில் இருக்கின்றனர்' எனவும், ‛திமுக, தமிழக மக்களுக்கு பாரமாக இருக்கிறது' என்றும் பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சித்துள்ளார்.


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பா.ஜ., சார்பில் மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா பேசியதாவது: முதல்வர் ஸ்டாலினிடம் ஆட்சி, கட்சி, குடும்பம் கட்டுப்படவில்லை.

திமிரு எடுத்தவர்கள் எல்லாம் திமுக.,வில் இருக்கின்றனர். வாலை ஒட்ட நறுக்கி விடுவோம். திமுக, தமிழக மக்களுக்கு பாரமாக இருக்கிறது. புதுச்சேரியில் தமிழ் பேராசிரியருக்கு ரூ.40 ஆயிரம் ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் ரூ.20 ஆயிரம் தான் வழங்கப்படுகிறது. இதுதான் தமிழகத்தில் தமிழை வளர்க்கும் நிலை.

Latest Tamil News
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பட்ஜெட் உரையை படித்தது தமிழா? என் தாய் தமிழ் அழுது விடுவாள். திமுக தமிழை அழிக்க வந்த ஒரு அமைப்பு; திமுக தமிழ் விரோதி. எந்த பிரச்னையாக இருந்தாலும் தீர்வு ஒன்றுபட்ட இந்தியாவில் இருக்கிறது.

காவிரிக்கு நதிநீர் ஆணையம் அமைத்து கொடுத்தது பிரதமர் மோடி தான். 2024ல் லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.,வுக்கு 30 இடங்களை கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


வாசகர் கருத்து (31)

  • K.n. Dhasarathan - chennai,இந்தியா

    அப்போ பி.ஜே.பி யில் இருப்பவர்கள் யார் ? நானே சொல்லிவிடுகிறேன், பின்புற வாசல்வழி வந்து ஆட்சியை கலைப்பவர்கள் எல்லோரும் பி.ஜே.பி.யில் ( மட்டும் ) இருக்கிறார்கள். ஹா ஹா ஹா .

  • ramesh - chennai,இந்தியா

    இந்த திமிர் பிடித்தவர் மற்றவர்களை பிடித்தவன் என்கிறார்

  • V GOPALAN - chennai,இந்தியா

    Will BJP give Rs.20000 per vote and Silver Rice cooker 5 ltrs. We will vote only to DMK as you can not give

  • venugopal s -

    ஆனால் இந்த திமிர் விஷயத்தில் அவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்தாலும் உங்களுடன் போட்டி போட முடியாது

  • Bala - chennai,இந்தியா

    தமிழ கத்துக்கணும். அப்படி ஒரு நிலை வந்தால் அதுல ஒரு வசதி. தமிழ் கத்துக்கும்போது இலவசமா இந்தியும் கத்துக்கலாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்